செ.வெ.எண்:765- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் சாலை மற்றும் நூலகங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2025
நீலகிரி மாவட்டம் எப்பநாடு ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பிரதான் மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.34 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலையினையும், தும்மனட்டி, கக்குச்சி ஊராட்சிப்பகுதிகளில் பொது நூலகங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.44 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நூலகங்களையும், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், அரசு தலைமைச்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 46KB)
