மூடு

செ.வெ.எண்:791- திருநங்கையர் தின விருது – 2025

வெளியிடப்பட்ட தேதி : 05/01/2025

சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு திருநங்கையர் தின விருது – 2025ஆம் ஆண்டுக்கான திருநங்கையர் தினமான ஏப்ரல், 15ஆம் நாள் அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். எனவே தகுதியான நபர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 10.02.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 113KB)