செ.வெ.எண்:93- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2026
நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 100 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை, பழவகைகள், வெற்றிலை பாக்கு, மஞ்சள்கயிறு, குங்குமம், சந்தனம், வளையல், புடவை, இனிப்பு உள்ளிட்ட 9 வகையான சீர்வரிசை பொருட்கள் மற்றும் உணவினை வழங்கி, அவர்களுடன் உணவு உட்கொண்டார்.(PDF 46KB)