செ.வெ.எண்:191- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் உதகை வட்டம் 16.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, 10 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000/- மதிப்பீட்டில் புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.(PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:190- தோட்டக்கலைத்துறையின் செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025தோட்டக்கலைத்துறையின் செய்தி வெளியீடு.(PDF 199KB)
மேலும் பலசெ.வெ.எண்:189- நீலகிரி மாவட்ட சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன
வெளியிடப்பட்ட நாள்: 14/04/2025நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 119 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.(PDF 91KB)
மேலும் பலசெ.வெ.எண்:188- அண்ணல் அம்பேத்கர் 135 ஆவது பிறந்த நாள் – சமத்துவ நாள் விழா!
வெளியிடப்பட்ட நாள்: 14/04/2025நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாள் சமத்துவ நாள் விழாவில், 23 பயனாளிகளுக்கு ரூ.42.37 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:187- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025நீலகிரி மாவட்டம், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில், உழவர் உற்பத்தியாளர்; நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 122KB)
மேலும் பலசெ.வெ.எண்:186- மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பட்டமேற்பு நிகழ்வில் பட்டச்சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025நீலகிரி மாவட்டத்தில், முதல் நாள் பட்டமேற்பு நிகழ்வில், உதகை அரசு கலைக்கல்லூரியில் படித்து முடித்த 585 மாணவ, மாணவியர்களுக்கு பட்டச்சான்றிதழ்களை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் வழங்கி, பாராட்டினார்.(PDF 186KB)
மேலும் பலஅண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ஆம் நாளை முன்னிட்டு “சமத்துவம் காண்போம்” போட்டிகள்!
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ஆம் நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் 10.4.2025 முதல் 30.4.2025 வரை “சமத்துவம் காண்போம்” போட்டிகள்! நடைபெறுகிறது. இதில் பொதுமக்களும் மாணவர்களும் பங்கேற்கலாம்!(PDF 423KB)
மேலும் பலசெ.வெ.எண்:185- ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025நீலகிரி மாவட்ட அனைத்து அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற நேரடியாகவோ Gpay, Phonepe மற்றும் Paytm மூலமாக லஞ்சம் கேட்டால் நீலகிரி, ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரை தொடர்புகொள்ளுமாறு காவல் துணைகண்காணிப்பாளர் திரு.அ.தி.ஜெய்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 20KB)
மேலும் பலசெ.வெ.எண்:184- முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – 2025
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.(PDF 180KB)
மேலும் பலசெ.வெ.எண்:183- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 16.04.2025 அன்று உதகை வட்டத்தில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025ஏப்ரல் மாதம் எதிர்வரும் 16.04.2025 அன்று முற்பகல் 09.00 மணியளவில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டமானது உதகை வட்டத்தில், நடைபெற உள்ளது. (PDF 112KB)
மேலும் பல