செ.வெ.எண்:598- தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025செ.வெ.எண்:597- 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அறிவியலறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் சார்பில் நடைபெற்ற 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அறிவியலறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன்; அவர்கள் 24 அறிவியலறிஞர்களுக்கு விருதுகள், பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார்.(PDF 51KB)
மேலும் பலசெ.வெ.எண்:596- மாண்புமிகு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் அருளகம் பாஸ்டர் சென்டரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025நீலகிரி மாவட்டத்தில், உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 12 மற்றும் 13-ற்காக உதகை அருளகம் பாஸ்டர் சென்டரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர், கோவி செழியன்; அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 10 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கினார்கள்.(PDF 147KB)
மேலும் பலசெ.வெ.எண்:595- தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கான களஉதவியாளர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் உதகையில் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அறிவிக்கை கடிதத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை) – II. 1794 களஉதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் மின்பணியாளர் அல்லது கம்பியாளர் கல்விப்பிரிவில் தொழிற்பயிற்சி சான்று(ITI) பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணியிடத்திற்கு இணையவழியில் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in வழியாக அறிந்துக்கொள்ளலாம். இத்தேர்விற்க்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும், […]
மேலும் பலசெ.வெ.எண்:594- ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தினங்களில் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்கள் பயன்பாட்டினை தவிர்த்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025கடந்த 01.01.2019 முதல் “ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை தடை செய்து தமிழக அரசானது ஆணை பிறப்பிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தொடர்ந்து சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை பொதுமக்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், வணிகர்கள்/வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அவற்றிற்கு மாற்றாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு […]
மேலும் பலசெ.வெ.எண்:593- நீலகிரி மாவட்டத்தில் 30.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 29/09/202530.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்டவார்டு 12 மற்றும் 13-ற்கான முகாம் உதகை அருளகம் பாஸ்டர் சென்டரிலும், கூடலூர் நகராட்சிக்குட்பட்டவார்டு 11, 12, 13,14 மற்றும் 15 -ற்கானமுகாம் கூடலூர் நர்த்தகி திருமண மண்டபத்திலும், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 20-ற்கான முகாம் பாண்டியார் குடோன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் மைதானத்திலும், பந்தலூர் வட்டம், சேரங்கோடு கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் சேரங்கோடு சமுதாய கூடத்திலும், குந்தாவட்டம், முள்ளிகூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான […]
மேலும் பலசெ.வெ.எண்:592- நீலகிரி மாவட்டத்தில் “நிமிர்ந்து நில்” என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025நீலகிரி மாவட்டத்தில், “நிமிர்ந்து நில்” என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (TNYIEDP) அனைத்து துறை அலுவலர்களுடனான உயர் மட்ட மேலாண்மை சந்திப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் திரு.அம்பலவாணன் இ.த.க.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 56KB)
மேலும் பலசெ.வெ.எண்:591- நீலகிரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி (02.10.2025) தினத்தை முன்னிட்டு மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 02.10.2025 (வியாழக்கிழமை) அன்று எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:590- அரசு தலைமைக்கொறடா அவர்கள் “தமிழ் புதல்வன்” மற்றும் “புதுமைப்பெண்” திட்டத்தின் வங்கி பற்று அட்டைகளை மாணவர்களுக்கு வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (25.09.2025) கல்வியில் சிறந்த தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியில் கொண்டாட்டம் 2025-2026 கல்வி ஆண்டிற்கான “புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன்” திட்டங்களை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா […]
மேலும் பலசெ.வெ.எண்:589- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி- II&IIA) தேர்வு 28.09.2025 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி- II&IIA) பதவிகளுக்கான் தேர்வு 28.09.2025 அன்று முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 09 தேர்வு மையங்களில், 2604 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.(PDF 51KB)
மேலும் பல
