மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:271 – நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் ஜுன் 2026 மாதத்திற்கு  07.06.2026 மற்றும் 08.06.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 38KB )

மேலும் பல

செ.வெ.எண்:270 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நடைபெற்ற ‘வருவாய் தீர்வாயம்”(ஜமாபந்தி) இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, 10 நபர்களுக்கு ரூ. 2.43 இலட்சத்திற்கான ஈமச்சடங்கு மற்றும் தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.  (PDF 47KB )

மேலும் பல

செ.வெ.எண்:269 – சாந்தி விஜய் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (04.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

நீலகிரி மாவட்டம் உதகை சாந்தி விஜய் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 34KB )

மேலும் பல

செ.வெ.எண்:268 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நடைபெற்ற ‘வருவாய் தீர்வாயம்” (ஜமாபந்தி) முதல் நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 119 மனுக்களை இன்று (03.06.2026) பெற்றுக் கொண்டார். (PDF 47KB )

மேலும் பல

செ.வெ.எண்:267- மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில்:- மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படஉள்ளது. (PDF 68KB ) List of Available Positions: Radiographer Hospital worker Audiologist-Speech Therapist Audiologist. Health Inspector Lab Technician Physiotherapist

மேலும் பல

செ.வெ.எண்:266- நீலகிரி மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் 03.06.2026 முதல் 05.06.2026 வரை ஜமாபந்தி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

நீலகிரி மாவட்டத்தில் பசலி 1435-க்கான வருவாய் தீர்வாயம் 03.06.2026 முதல் 05.06.2026 வரை ஜமாபந்தி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. (PDF 41KB )

மேலும் பல

செ.வெ.எண்:265- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை 2026 தொடங்குவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (01.06.2026) நடைபெற்றது. (PDF 64KB )    

மேலும் பல

செ.வெ.எண்.264- “மக்கள்தொகை கணக்கெடுப்பு – 2027” மேற்கொள்ளுதல் தொடர்பான பயிற்சி – 01.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி மேற்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்பினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) தொடங்கி வைத்தார். (PDF 47KB )

மேலும் பல

செ.வெ.எண்.263- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் யானை தாக்கி சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான கூட்டம் நடைப்பெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பாக்கனா பகுதியை சேர்ந்த மிஷாப் என்ற சிறுவன் யானை தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி. லட்சமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப அவர்கள் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்களுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான கூட்டம் இன்று (30.05.2026) நடைப்பெற்றது. (PDF 185KB )

மேலும் பல

செ.வெ.எண்:262 – மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை பண்ணை ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் உதகமண்டலத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை பண்ணை ஆகியவற்றின் செயல்பாடுகளை, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி செ.கமலி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (29.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 71KB )  

மேலும் பல