மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:337- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் கால அவகாசம் (30.06.2026)லிருந்து 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  (PDF 48KB )

மேலும் பல

செ.வெ.எண்:336- தமிழ்நாடு காவல்துறையில் ஆர்டர்லி முறை ஒழிப்பு கண்காணிப்பு குழு அமைத்தல்

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

காவல் துறையில் “ஆர்டர்லி சிஸ்டம்” (Orderly System) முற்றிலுமாக ஒழிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கண்காணித்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திட மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவினை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட அளவிலான குழு 02.02.2026 அன்று அமைக்கப்பட்டுள்ளது. (PDF 90KB )

மேலும் பல

செ.வெ.எண்:335- தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம். (09.07.2026 – 15.07.2026)

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

ஓவ்வொரு வருடமும் ஜுலை இரண்டாவது வாரத்தில் (09.07.2026 – 15.07.2026) தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாகவும், 15.07.2026 அன்று உலக இளைஞர் திறன் நாள் (World Youth Skills Day) என்பதால் திறன்பயிற்சிகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவ / மாணவியர்களுக்கு நடத்தப்பட உள்ளது. (PDF 64KB )

மேலும் பல

செ.வெ.எண்:334- நெடுகுளா மற்றும் ஜக்கனாரை ஆகிய ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (08.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நெடுகுளா மற்றும் ஜக்கனாரை ஆகிய ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB )

மேலும் பல

செ.வெ.எண்:333- கோத்தகிரி வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -08.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம் நெடுகுளா கிராம சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 60 பயனாளிகளுக்கு ரூ.37.59 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (08.07.2026) வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 49KB )  

மேலும் பல

செ.வெ.எண்:332- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  (PDF 43KB )

மேலும் பல

செ.வெ.எண்:331- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (31.07.2026) வரை நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (31.07.2026) வரை நடைபெறுகிறது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. (PDF 49KB )

மேலும் பல

செ.வெ.எண்:330- கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்  (PDF 52KB )

மேலும் பல

செ.வெ.எண்:329- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள், தலைமையில் நடைபெற்றது. (PDF 202KB )

மேலும் பல

செ.வெ.எண்:328 – அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ST) உப்பட்டியில் 2026 ஆம் ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ST) உப்பட்டியில் 2026 ஆம் ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. தகுதியுள்ள பழங்குடியின மற்றும் இதர பிரிவினை சேர்ந்த மாணவ/மாணவிகள் நேரடி சேர்க்கை (Spot Admission) மூலம் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். மேற்படி பயிற்சியாளர் சேர்க்கை ஆனது உப்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தற்போது நடைபெற்று வருவதால் உரிய ஆவணங்களுடன் பயிற்சியாளர்கள் வருகை தருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது (PDF 81KB )

மேலும் பல