செ.வெ.எண்:420- நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க 400 இளம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2025நீலகிரி மாவட்டத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுதல் என பேரிடர் காலங்களில் மக்களின் உயிர், உடைமைகளை பாதுகாக்க 400 இளம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:419- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறுதல்
வெளியிடப்பட்ட நாள்: 29/07/20252025ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாத்தொடர்பில் நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12.08.2025, 13.08.2025 ஆகிய நாள்களில் உதகை, சி.எஸ்.ஐ.(சி.எம்.எம்.) மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. (PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:418- “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2025நீலகிரி மாவட்டத்தில், “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் பயன் பெற நீலகிரி மாவட்டத்தில்; நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர் / மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 34KB)
மேலும் பலசெ.வெ.எண்:417- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேத்தி பேரூராட்சி மற்றும் குன்னூர் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2025நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி மற்றும் குன்னூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 54KB)
மேலும் பலசெ.வெ.எண்:416- நீலகிரி மாவட்டத்தில் 30.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 29/07/202530.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: கோத்திகிரி வட்டம், நடுஹட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம்; வெஸ்ட்ஃபுரூக் வி.பி.ஆர்.சி கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. (PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:414- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Aide) பயிற்சி வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்; (தாட்கோ) மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Aide) பயிற்சி வழங்கப்படவுள்ளது. (PDF 54KB)
மேலும் பலசெ.வெ.எண்:413- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 132 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 47KB)
மேலும் பலசெ.வெ.எண்:412- நீலகிரி மாவட்டத்தில் 29.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 28/07/202529.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 12, 13 மற்றும் 14-ற்கான முகாம் பாலக்லவா, ஜெயின் மண்டபத்திலும், கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட வார்டு 5, 8 மற்றும் 17-ற்கான முகாம் நிவாரணமையம், காந்தி மைதானத்திலும், குன்னூர் வட்டம், கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 6,7,8,13,14,15,16,17 மற்றும் 18-ற்கான முகாம் உல்லாடாசமுதாய கூடத்திலும், குன்னூர் வட்டம், மேலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் ஆறுகுச்சி சமுதாய கூடத்திலும், கோத்தகிரி வட்டம், நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் […]
மேலும் பலசெ.வெ.எண்:411- மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 02.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/07/2025நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 02.08.2025 அன்று பழங்குடியினர் பண்பாட்டு மையம், கார்டன் ரோடு உதகையில் நடைபெறவுள்ளது. (PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:410- நீலகிரி மாவட்டத்தில் செவிலியர் மற்றும் ஆய்வக நுட்புநர் (நிலை-III) ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள செவிலியர் மற்றும் ஆய்வக நுட்புநர் (நிலை-III) – ஒப்பந்த அடிப்படையில் – நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு(PDF 61KB)
மேலும் பல