மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:193- மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் இறுதி வாக்காளர் பட்டியலின் விவரம் குறித்து செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 யை முன்னிட்டு, இறுதி வாக்காளர் பட்டியலின் விவரம் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.(PDF 156KB)

மேலும் பல

செ.வெ.எண்:192- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 2026 தேர்தல் பொதுப்பார்வையாளர், தேர்தல் பார்வையாளர் (காவல்) மற்றும் தேர்தல் பார்வையாளர் (செலவினம்) 109-கூடலூர் (தனி) & 110 குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026

எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் 109-கூடலூர் (தனி) மற்றும் 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு பின்வரும் தேர்தல் பொதுபார்வையாளர், தேர்தல் பார்வையாளர் (காவல்) மற்றும் தேர்தல்பார்வையாளர் (செலவினம்) நியமனம்செய்துள்ளது.(PDF 40KB)

மேலும் பல

செ.வெ.எண்:191- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் தேர்தல் பார்வையாளர்(காவல்) 108-உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026 பணிகள் சுமுகமாகவும், நேர்மையாகவும்,சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்தியதேர்தல் ஆணையம் 108-உதகமண்டலம்சட்டமன்ற தொகுதிக்கு பின்வரும் தேர்தல் பொது பார்வையாளர், தேர்தல் பார்வையாளர் (காவல்) மற்றும் தேர்தல் செலவுக் கண்காணிப்பாளர் நியமனம் செய்துள்ளது.(PDF 58KB)

மேலும் பல

செ.வெ.எண்:190- காவல் பார்வையாளர் அவர்கள் வாக்குகளை எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை, காவல் பார்வையாளர் திருமதி லதா மனோஜ் இ.கா.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 52KB)  

மேலும் பல

செ.வெ.எண்:189- நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் ஒளிபரப்பப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தினை ஏராளமான வாக்காளர்கள் பார்வையிட்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 05/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026- யை முன்னிட்டு, வாக்காளர்களிடையே வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் ஒளிபரப்பப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தினை ஏராளமான வாக்காளர்கள் பார்வையிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொண்டனர்.(PDF 40KB)

மேலும் பல

செ.வெ.எண்:188- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தெங்குமரஹாடா கிராமத்தில் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 05/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – யை – முன்னிட்டு, 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெங்குமரஹாடா கிராம வாக்குச்சாவடி மையங்களில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 56KB)  

மேலும் பல

செ.வெ.எண்:187- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குப்பதிவு (23.04.2026) நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 – ஐ இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது(PDF 109KB)

மேலும் பல

செ.வெ.எண்:186- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 -ஐ முன்னிட்டு வாக்காளர்கள் தங்களது அடையாள ஆவணங்களை கட்டாயம் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 -ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது அடையாள ஆவணங்களை சரிபார்த்து, வாக்களிக்கும் நாளில் கட்டாயம் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்தல் நடைபெறும் நாளில் ஒழுங்கும், அமைதியும் காத்திட அனைவரும் ஒத்துழைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா […]

மேலும் பல

செ.வெ.எண்:185- இந்தியத் தேர்தல் ஆணையத்தால் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மதுவிலக்கு நாள் என (Dry Day) அறிவிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026-ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு சட்டம் மற்றும் ஒழுங்கினை பேணவும், சுதந்திரமான மற்றும் நேர்மையான வாக்குப்பதிவினை உறுதி செய்யவும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால், மதுவிலக்கு நாள் என (Dry Day) அறிவிக்கப்பட்டுள்ளது.(PDF 111KB)

மேலும் பல

செ.வெ.எண்:184- தேர்தல் காலத்தில் வாக்குப்பதிவு பிந்தைய கருத்துக்கணிப்பு  (Exit Poll) / கருத்துக்கணிப்பு (Opinion Poll) வெளியீடு – தடை அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

தமிழ்நாடுசட்டமன்றப்பொதுத்தேர்தல், 2026-இற்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்றுகாலை 7.00 மணிமுதல்மாலை 6.00 மணிவரை நடைபெறும். மேற்கண்ட தேர்தலின் போது கருத்துக்கணிப்பு (Opinion Poll) / வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பு (Exit Poll) முடிவுகளை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் இந்தியத்தேர்தல் ஆணையம் பின்வரும் தடை விதித்துள்ளது.(PDF 69KB)

மேலும் பல