செ.வெ.எண்:555- முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.09.2025 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர் தம் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட […]
மேலும் பலசெ.வெ.எண்:554- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 12.09.2025 முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.(PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:553- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 153 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 43KB)
மேலும் பலசெ.வெ.எண்:552- அரசு தலைமைக்கொறடா அவர்கள் “அன்புகரங்கள்” திட்டத்தை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், “அன்புகரங்கள்” திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 63 மாணவ, மாணவிகளில் 23 மாணவ, மாணவிகளுக்கு அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ரூ.2,000 /- உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.(PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:551- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணத்தை முன்னிட்டு 18.09.2025 அன்று ஒத்தி வைக்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 2025-ம் மாதத்தில் 19.09.2025 அன்று காலை 11.00 மணிக்கு உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நிர்வாக காரணத்தை முன்னிட்டு 18.09.2025 அன்று நடத்தப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 34KB)
மேலும் பலசெ.வெ.எண்:550- நீலகிரி மாவட்டத்தில் 16.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/202516.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 30 மற்றும் 31-ற்கான முகாம் உதகை ஸ்ரீனிவாச கல்யாண மண்டபத்திலும், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 14, 15 மற்றும் 21 -ற்கான முகாம் பாண்டியார் குடோன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மைதானத்திலும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட (கண்டோன்மென்ட் பகுதி) வார்டு 4, 5 மற்றும் 6-ற்கான முகாம் சிங்காரத்தோப்பு சமுதாய கூடத்திலும், உதகமண்டலம் வட்டம், உல்லத்தி கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் உல்லத்தி சமுதாய […]
மேலும் பலசெ.வெ.எண்:549- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி வட்டம் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனைகளை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2025நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம், கேர்கம்பை ஹில் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்”; சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனைகளை நேரில் பார்வையிட்டார்.(PDF 232KB)
மேலும் பலசெ.வெ.எண்:548- தற்காலிகப் பட்டாசுக்கடை உரிமம்
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2025தீபாவளி பண்டிகை எதிர்வரும் 20.10.2025 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசுக்கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற்றிட (http://www.tnesevai.tn.gov.in) இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள்E Sevai மூலம் உரிய ஆவணங்களுடன்10.10.2025-ற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.(PDF 49KB)
மேலும் பலசெ.வெ.எண்:547- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலநாடு உழவர் உற்பத்தி 5வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், அய்யன்கொல்லியில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும், மலநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் காப்பி மற்றும் குறுமிளகு மதிப்புக்கூட்டு இயந்திரத்தின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, மலநாடு உழவர் உற்பத்தி 5வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.(PDF 53KB)
மேலும் பலசெ.வெ.எண்:546- அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது.(PDF 636KB)
மேலும் பல
