செ.வெ.எண்:80- தோட்டக்கலை இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் கேரட் கழுவும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 14/02/2025தோட்டக்கலை இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் நீலகிரி மாவட்ட உருளை கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம், கேரட் கழுவும் இயந்திர உரிமையாளர்கள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கங்களுடன் கூட்டாக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதில் 14.02.2025 இன்று முதல் நீலகிரி மாவட்ட விவசாயிகள் நலன் கருதி நீலகிரி மாவட்டத்திற்கு வெளியிலிருந்து கேரட் கொண்டு வந்து கழுவுவதை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி அளித்துள்ளனர்.(PDF 108KB)
மேலும் பலசெ.வெ.எண்:79- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 14/02/2025தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் திரு.நந்தகுமார் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் நீலகிரி மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:78- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் 21.02.2025 அன்று காலை 11.00 மணியளவில் உதகை RCTC (பழங்குடியினர் பண்பாட்டு மையம்) கார்டன் சாலை, ஊட்டி, கீழ்தள கூட்ட அரங்கில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.(PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:77- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025நீலகிரி மாவட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து, துண்டு பிரசுரங்களை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:76- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பல்வேறு துறைச்சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025நீலகிரி மாவட்டம், உதகை சட்டமன்ற தொகுதியில், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, பல்வேறு துறைச்சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:75- “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உருவாக்க “DRUG FREE TN” என்ற மொபைல் செயலியானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, என்ற இலக்கை அடைய, உங்கள் பங்களிப்பை தரவும்! இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் போதைப்பொருள்கள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான விபரங்களை புகார் செய்ய நீலகிரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்களை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 116KB)
மேலும் பலசெ.வெ.எண்:74- டாம்கோ, டாப்செட்கோ – லோன்மேளா
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து நடத்தும் “சிறப்பு லோன் மேளாக்கள்” நடைப்பெற உள்ளது. எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன் பெறுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 71KB)
மேலும் பலசெ.வெ.எண்:73- ஜக்கனாரை ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – 12.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், ஜக்கனாரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 69 பயனாளிகளுக்கு ரூ.46.49 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:72- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நெகிழி வகைகள் தானியங்கி குடிநீர் விநியோக இயந்திரம் குறித்து கலந்தலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025நீலகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள நெகிழி வகைகள், தானியங்கி குடிநீர் விநியோக இயந்திரம் ஆகியவற்றை குறித்து இன்று 10.02.2025 மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் தலைமையில், அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் , மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:71- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025நீலகிரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார். (PDF 45KB)
மேலும் பல