செ.வெ.எண்:377- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலிக்கல் பேரூராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025நீலகிரி மாவட்டம், உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட சுங்கம் சி.எஸ்.ஐ சமுதாய கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 58KB)
மேலும் பலசெ.வெ.எண்:376- நீலகிரி மாவட்டத்தில் 17.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 16/07/202517.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 3 மற்றும் 4-ற்கான முகாம் சகாயமாதா கோவில் மண்டபத்திலும், கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட 4, 9 மற்றும் 11-ற்கான முகாம் நிவாரண மையம்,காந்தி மைதானத்திலும், கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 12 வார்டுகளுக்கான முகாம் அச்சனக்கல் சமுதாய கூடத்திலும், குன்னூர் வட்டம், பேரட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் பேரட்டி சமுதாய கூடத்திலும், கோத்தகிரி வட்டம், ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் ஜக்கனாரை மேல்கேரி மண்டபத்திலும் […]
மேலும் பலசெ.வெ.எண்:375- நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் விசைக்களை எடுக்கும் கருவி (பவர் வீடர்) மானிய விலையில் வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பவர் டில்லர் மற்றும் விசைகளை எடுக்கும் கருவி (பவர் வீடர்) மானியத்தில் வழங்குதல்.(PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:373- நீலகிரி மாவட்டத்தில் 16.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 15/07/202516.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 18 வார்டுகளுக்கான முகாம் சுங்கம் சி.எஸ்.ஐ சமுதாய கூடத்திலும், குன்னூர் வட்டம் பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கோடமலை சமுதாய கூடத்திலும், கோத்தகிரி வட்டம், தேனாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் சோலூர் மட்டம் ஊராட்சி அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.(PDF 30KB)
மேலும் பலசெ.வெ.எண்:372- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 18.07.2025 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 18.07.2025 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது. (PDF 392KB)
மேலும் பலசெ.வெ.எண்:371- அரசு தலைமை கொறடா அவர்கள் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பாலகிளாவா ஜெயின் மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 65KB)
மேலும் பலநீலகிரி மாவட்டத்தில் தொகுதி ஆரம்ப சுகாதார மையங்களில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஆலோசகர் (Tribal Counsellor) பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025நீலகிரி மாவட்டத்தில் தொகுதி ஆரம்ப சுகாதார மையங்களில் (Block PHCs) ஆலோசகர் (Tribal Counsellor) பணியமர்த்தப்பட்டு மாவட்டத்தின் பழங்குடி தொகுதிகளில் உள்ள விரிவான பட்டியல் கேரியர்கள் / நோயுற்ற நபர்களை (Diseased person) மேற்பார்வையிட நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 01 ஆலோசகர் (Tribal Counsellor) பணியிடத்தை தோற்றுவித்து அந்த பணியிடங்களை தகுதியான பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஆலோசகர்களை (Tribal Counsellor) கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 18.7.2025 அன்று மாலை 5 மணிக்குள் […]
மேலும் பலசெ.வெ.எண்:370- புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர் புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025இந்தியாவில் உள்ள புத்த, சமண மற்றும் சீக்கிய மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:369- வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவுரை வெளியிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் 24 / 7 கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளவும். • இந்தியாவிலிருந்து அழைப்புக்கு : 1800309 3793 • வெளிநாடுகளிலிருந்து : 08069009900 (Missed Call) 08069009901 • […]
மேலும் பலசெ.வெ.எண்:368- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில்,“உங்களுடன் ஸ்டாலின்”என்ற திட்டம் துவக்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமதி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக“உங்களுடன் ஸ்டாலின்”திட்ட முகாமானது எதிர்வரும் 15.07.2025 முதல் 14.08.2025 வரை உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர் மற்றும் குந்தா ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் வாரியாக 146 முகாம்களில் நடைபெறவுள்ளது என தகவல்.(PDF 60KB)
மேலும் பல