செ.வெ.எண்:355- நீலகிரி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பெறவுள்ளன
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025நீலகிரி மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் 12.07.2025 முதல் நடத்தப்பெறவுள்ளன. எனவே நீலகிரி மாவட்டத்திலுள்ள மாணவ / மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 48KB)
மேலும் பலசெ.வெ.எண்:354- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 201 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 52KB)
மேலும் பலசெ.வெ.எண்:353- நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2025நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது எதிர்வரும் 15.07.2025 முதல் 14.08.2025 வரை உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர் மற்றும் குந்தா ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளிலும், 16.08.2025 முதல் 14.09.2025 வரை உதகமண்டலம், குந்தா, பந்தலூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளிலும், 15.09.2025 முதல் 14.10.2025 வரை உதகமண்டலம், பந்தலூர் மற்றும் கூடலூர் வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளில் […]
மேலும் பலசெ.வெ.எண்:352- நீலகிரி மாவட்ட மகளிர் அதிகாரமையத்தில் உள்ள காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025நீலகிரி மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகாரமையம் (District Hub for Empowerment of Women)-த்தில் உள்ள காலி பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளதால், தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:351- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (04.07.2025) நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:350- அரசு தலைமை கொறடா அவர்கள் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற திட்டத்தினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி ஊராட்சி இளித்தொரை கிராமத்தில் அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் உழவர் நலத் துறையின் சார்பில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தினை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:349- அரசு தலைமை கொறடா அவர்கள் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மாடல் ஹவுஸ் பகுதி நகர்ப்புற நல வாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பார்வையிட்டு, குத்துவிளக்கு ஏற்றினார்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:348- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மசினகுடி ஊராட்சியில் முடிவுற்ற வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், மசினகுடி ஊராட்சி பகுதியில், ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும், முடிவுற்ற வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 30KB)
மேலும் பலசெ.வெ.எண்:347- நீலகிரி மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்திலுள்ள குழந்தைகளுக்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் (Counseling) சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 384KB)
மேலும் பலசெ.வெ.எண்:346- அரசு தலைமை கொறடா அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் 5 இணைகளுக்கான திருமணத்தினை நடத்தி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025நீலகிரி மாவட்டம் உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் 5 இணைகளுக்கான திருமணத்தினை அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் நடத்தி வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.(PDF 34KB)
மேலும் பல