மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:

செ.வெ.எண்:608- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2024

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 32KB)

மேலும் பல

செ.வெ.எண்:607- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாநில சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இ-பாஸ் சோதனைப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2024

நீலகிரி மாவட்டம், கூடலூர் நாடுகானி மாநில சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இ – பாஸ் சோதனை மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் ஆய்வு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 106KB)

மேலும் பல

செ.வெ.எண்:606 – உத்தமர் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2024

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சியில் உத்தமர் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 22 பயனாளிகளுக்கு ரூ.50.15 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 39KB)

மேலும் பல

செ.வெ.எண்:605- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2024

நீலகிரி மாவட்டத்தில் கதர் அங்காடியில் உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.(PDF 108KB)

மேலும் பல

செ.வெ.எண்:604- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2024

நீலகிரி மாவட்டத்தில், உத்தமர் காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.(PDF 107KB)

மேலும் பல

செ.வெ.எண்:603- மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உதகையிலுள்ள அரசினர் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2024

நீலகிரி மாவட்டம், உதகையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் அரசினர் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை அறிந்து கொள்ளும் வகையில் புகார் பெட்டி வைக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். (PDF 34KB)

மேலும் பல

செ.வெ.எண்:602- நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச சைகை மொழி வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2024

நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், சர்வதேச சைகை மொழி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து, தொடங்கி வைத்தார். (PDF 39KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:600- நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையினை நீட்டிக்க சென்னை உயர்நீதி மன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2024

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில், மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ் நடைமுறையினை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.(PDF 19KB)

மேலும் பல