செ.வெ.எண்:193 – தேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் – 2024 ஐ முன்னிட்டு, தேர்தல் செலவின பார்வையாளர்கள் திரு.டி.கிரண் இ.வ.ப., அவர்கள் மற்றும் திரு.சந்தீப் குமார் மிஸ்ரா இ.வ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 110KB)
மேலும் பலசெ.வெ.எண்:192 – நீலகிரி மாவட்டத்தில் 19.03.2024 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் கலந்து கொண்டோர் விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024நீலகிரி மாவட்டத்தில் 19.03.2024 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் கலந்து கொண்டோர் விவரம் (PDF 166KB)
மேலும் பலசெ.வெ.எண்:191 – தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னேற்பாடுகள் குறித்து, மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 115KB)
மேலும் பலசெ.வெ.எண்:190 – விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024தேர்தல் நடத்தை விதிகள் 16.03.2024 அன்று அமலுக்கு வந்த காரணத்தினால் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 22.03.2024 அன்று நடைபெறவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:189 – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையமான உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:188 – படைக்கலன் உரிமம் வைத்திருப்பவர்கள் தங்கள் படைக்கலன்களை உடனடியாக இருப்பு வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2024நீலகிரி மாவட்டத்தில், படைக்கலன் உரிமம் பெற்று படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக இருப்பு வைத்திடுமாறு என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள தெரிவித்துள்ளார். (PDF 76KB)
மேலும் பலசெ.வெ.எண்:187 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அச்சக உரிமையாளர்கள், வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகு பிடிப்போர், திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, அச்சக உரிமையாளர்கள், வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகு பிடிப்போர், திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 27KB)
மேலும் பலசெ.வெ.எண்:186 – நீலகிரி மாவட்டத்தில் 18.03.2024 அன்று நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் கலந்து கொண்டோர் விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2024நீலகிரி மாவட்டத்தில் 18.03.2024 அன்று நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் கலந்து கொண்டோர் விவரம்.(PDF 249KB)
மேலும் பலசெ.வெ.எண்:185 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் 2024ஐ முன்னிட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தில் (MCMC) மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகனை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:184 – தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்புக் குழு கைப்பெசி எண்கள்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் – 2024-ஐ முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக புகார்களை தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுவின் கைப்பெசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். (PDF 65KB)
மேலும் பல
