ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:418- தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. (PDF 86KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:417- தற்காலிக கட்டிடங்களில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் இன்று 20.08.2026.ல் திறந்து வைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

அரசாணை நிலைஎண் 330 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (பரா-2(1) துறை நாள் 27.11.2025ன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் அரசிதழ் எண்.18 நாள் 27.12.2025.ன்படியும் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம் – 13 ஊராட்சிகளை 38 ஆக பிரித்து மறுசீரமைப்பு செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து பிரிக்கப்பட்ட புதிய ஊராட்சிகள் தற்காலிக கட்டிடங்களில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் இன்று 20.08.2026.ல் திறந்து வைக்கப்பட்டது. (PDF 418KB)

DSC_0636 copy

செ.வெ.எண்:416- நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (20.08.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று (20.08.2026) நடைபெற்றது. (PDF 31KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:415- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (31.08.2026) வரை நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (31.08.2026) வரை நடைபெறுகிறது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.  (PDF 80KB)

Untitled-1 copy

செ.வெ.எண்:414 -திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக, மாவட்ட அளவிலான உறுதி மொழி ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (20.08.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக, மாவட்ட அளவிலான உறுதி மொழி ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.08.2026) நடைபெற்றது. (PDF 61KB)

MEETY (2)

செ.வெ.எண்:413 – “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இன்று (19.08.2026) குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

‘உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், இன்று (19.08.2026) குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 217KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:412- TNPSC தொகுதி II / IIA – தேர்வு மற்றும் வங்கித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

நீலகிரி மாவட்டத்தில் தொகுதி II / IIA – தேர்வு மற்றும் வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது (PDF 118KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:411- தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் குடும்பத்தினர்களுக்கு 2026-2027ஆம் ஆண்டிற்கு நலத் திட்ட உதவிகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர்களுக்கு நல வாரிய நலத்திட்ட உதவிகளை ஆன்லைன் வாயிலாக www.tnctvwb.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து RTGS/NEFT மூலம் நிவாரணத் தொகை நேரடியாக உறுப்பினர்கள்/வாரிசுதார்கள் ஆகியோர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  (PDF 367KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:410- மாவட்ட கால்நடைப் பண்ணையில் உள்ள 4 கற்பூரமரங்கள் 01.09.2026 அன்றும் கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள் 02.09.2026 அன்றும் ஏலக்குழுவின் மூலம் பொது ஏலம் விடப்படும்.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

கால்நடை பராமரிப்புத்துறை, உதகமண்டலம் மாவட்ட கால்நடைப் பண்ணையின் நுழைவாயில் பகுதியில் உள்ள நான்கு எண்ணிக்கை கற்பூரமரங்கள் எதிர்வரும் 01.09.2026 அன்று பிற்பகல் 2.00 மணியளவிலும் மாவட்ட கால்நடைப் பண்ணையில் கழிவு செய்யப்பட்ட இரண்டு எண்ணிக்கை நான்கு சக்கர வாகனங்கள் 02.09.2026 அன்று பிற்பகல் 2.00 மணியளவிலும் ஏலக்குழுவினர் முன்னிலையில் ஏலமிடப்பட உள்ளன. (PDF 57KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:409- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது.  (PDF 141KB)