கால்நடை வளர்ப்போர்களின் ஆதார் எண், கைபேசி எண் மற்றும் கால்நடை விவரங்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026இந்திய அரசாங்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய மின்னணு கால்நடை இயக்கம் (National Digital Livestock Mission) மற்றும் தமிழக அரசும் இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை வளர்ப்போர்களின் ஆதார் எண், கைபேசி எண் மற்றும் கால்நடை விவரங்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. (PDF 64KB )
மேலும் பலசெ.வெ.எண்:284- உதகை இளைஞர் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் ஒருவருடத்திற்கு உணவகம் அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026உதகை இளைஞர் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் ஒருவருடத்திற்கு உணவகம் செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்டஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். (PDF 44KB )
மேலும் பலசெ.வெ.எண்:283- அஞ்சல் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயன் காசோலைப் புத்தகம் அறிமுகம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026India Post அஞ்சல் சேமிப்பு கணக்கு (POSA) வாடிக்கையாளர்களுக்காக புதிய தனிப்பயன் காசோலைப் புத்தகம் (Personalized Cheque Book – PCB) வசதியை 08.05.2026 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய காசோலைப் புத்தகத்தில் கணக்குதாரரின் பெயர், கணக்கு எண் மற்றும் இந்திய அஞ்சல்துறையின் IFSC குறியீடு முன்கூட்டியே அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் பாதுகாப்பு அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு வங்கித் தரத்திலான சேவை கிடைக்கும். (PDF 790KB )
மேலும் பலசெ.வெ.எண்:282- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திரு.வில்லியம் கிரஹம் மெக்ஐவர் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026நீலகிரி மாவட்டம், உதகை, புனித ஸ்டீபன் திருத்தலத்தில், தோட்டக்கலைத்துறையின் சார்பில், திரு.வில்லியம் கிரஹம் மெக்ஐவர் அவரது நினைவிடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். (PDF 199KB )
மேலும் பலசெ.வெ.எண்.281- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (08.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 133 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 109 KB )
மேலும் பலசெ.வெ.எண்:280- மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம்/கிசான் மேளா 09.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் ஒரு அங்கமாக, மாவட்ட அளவிலான“இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம்/கிசான் மேளா” 09.06.2026 அன்று உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்கா அருகில் அமைந்துள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது. (PDF 38KB )
மேலும் பலசெ.வெ.எண்:279- ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026ரயில்வே உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணிபோட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0423-2444004 / 7200019666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார் . (PDF 211KB )
மேலும் பலசெ.வெ.எண்:276 – வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (யூ.ஒய்.இ.ஜி.பி) கடன் பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப, அவர்கள் அழைப்பு (PDF 62KB )
மேலும் பலசெ.வெ.எண்:278- நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர்களுக்கு 2026 – 2027 க்கான விடுதி சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 05/06/20262026–2027 கல்வியாண்டிற்கான நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) மாணவ, மாணவியர்களுக்கான விடுதி சேர்க்கை. (PDF 58KB )
மேலும் பலசெ.வெ.எண்:277- தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 46KB )
மேலும் பல