மூடு

சிறப்பு தீவிர திருத்தம் 2026

வடிகட்டு:
02

செ.வெ.எண்:731- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025

நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.(PDF 34KB)

மேலும் பல

செ.வெ.எண்:729- நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கால்பந்து போட்டியின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 24/11/2025

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எச்.ஏ.டி.பி விளையாட்டு, மைதானத்தில் நடைபெற்ற “THODA GUYS Vs KANDAL FOOT BALL ACADEMY” ஆகியோர்களுக்கிடையேயான கால்பந்து போட்டியினை வாக்காளர் பதிவு அலுவலர் /உதகை வருவாய் கோட்டாட்சியர் திரு.டினு அரவிந்த் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 406KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:727- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் குன்னூரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு முகாமினை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 108KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:726- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் உதகமண்டலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றத்தை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் உதகை நகராட்சி அலுவலகத்தில், பூர்த்தி செய்து திரும்பி பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம்; செய்யப்படுவதை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 202KB)  

மேலும் பல
01

செ.வெ.எண்:715- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கூடலூரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றத்தை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, 109 கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பூர்த்தி செய்து திரும்பி பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம்; செய்யப்படுவதை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 39KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:710- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் உதகமண்டலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 16/11/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட பெள்ளத்தி கொம்பை பழங்குடியினர் கிராமம், மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாலகொலா ஊராட்சி தங்காடு ஆகிய பகுதியில், நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. ,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 24KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:709- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கோத்தகிரி ஊராட்சி மற்றும் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கீழ் கோத்தகிரி சோலூர்மட்டம் பொம்மன் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்களுக்கும், கோத்தகிரி நகராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. ,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

மேலும் பல
03

செ.வெ.எண்:702- நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே குறும்படத்தின் மூலம் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்பட்ட குறும்படத்தினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டனர்.(PDF 44KB)

மேலும் பல
04

செ.வெ.எண்:701- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)  

மேலும் பல
03

செ.வெ.எண்:698- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் உதகை நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 50KB)

மேலும் பல