செ.வெ.எண்:697- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 50KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்
வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மற்றும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 01.01.2026 – ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் இந்தப் பணியின் நோக்கம் வாக்காளர் பட்டியல்கள் துல்லியமாகவும் பிழையற்றவையாகவும் இருப்பதை உறுதி செய்வதாகும்.(PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:693- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வாக்காளர்களிடையே கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 24KB)
மேலும் பலசெ.வெ.எண்:690- நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கூடலூர் பகுதியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாமில் வாக்காளர்களிடையே கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வது தொடர்பான செயல்முறை அரங்கம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 23KB)
மேலும் பலசெ.வெ.எண்:674- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் விதமாக கணக்கீட்டு விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 43KB)
மேலும் பல
