மூடு

அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

02/07/2024 - 02/07/2024
நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

வாடிக்கையாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக்  கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 30.06.2024 அன்று முடிவடையும் காலாண்டிற்கான டாக் அதாலத் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  02.07.2024 அன்று 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

அஞ்சலக சேவை சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக, அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் – 643001என்ற முகவரிக்கு உறை மேல் “வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் சம்பந்தமாக” என்று குறிப்பிட்டு 01.07.2024 க்குள் வந்து சேரும்படி, அனுப்பி வைக்க இதன் மூலம் கோரப்படுகிறது.

பார்க்க (703 KB)