திருநங்கைகளின் குறைதீர்க்கும் முகாம்
11/08/2023 - 11/08/2023
மாவட்ட சமூகநல அலுவலகம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உதகமண்டலம்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உரிய வழிகாட்டுதலோடு திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாய் மாதந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் 11.08.2023 அன்று மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்