புத்தகத் திருவிழா 2023-2024
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2023நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா 2023-2024 எதிர்வரும் 20.10.2023 முதல் 29.10.2023 வரை உதகமண்டலம், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் இப்புத்தகத் திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை […]
மேலும் பல‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2023குன்னூர் மற்றும் கூடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 17.08.2023 அன்று ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ (Our Sister in Our ITI) விழிப்புணர்வு நிகழ்ச்சி காலை 10 மணியிளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலமாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2023தமிழ்நாடு அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தலைமையில் வருகின்ற 25.07.2023 அன்று பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி குன்னூரில் நடைபெறவுள்ளது
மேலும் பலஇலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2023கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு வரும் 24.06.2023 தேதி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம் உதகமண்டலம் சுகாதார மாவட்டம், தங்காடு ஓரநள்ளி […]
மேலும் பலசிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2023நீலகிரி மாவட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ‘சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்த தெரிவித்ததனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம், உதகை ஒன்றியம் மசினகுடி மற்றும் கூடலூர் ஒன்றியம் தேவர்சோலை ஆகிய கிராமங்களில் முறையே 27.06.2023 மற்றும் 12.07.2023 தேதிகளில் ‘சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்தப்பட உள்ளன.
மேலும் பல