மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தணிக்கையாளர் சேர்பட்டியல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சமுதாய அமைப்புகள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் தணிக்கை செய்திடும் பொருட்டு தணிக்கையாளர்களை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் வரப்பெற்றுள்ளது.

02/08/2024 12/08/2024 பார்க்க (1 MB)
தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள்

நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர் தற்காலிகமாக தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

30/07/2024 10/08/2024 பார்க்க (32 KB)
ஓட்டுநர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் நடமாடும் நம்பிக்கை மையம் வாகனத்திற்கு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/07/2024 07/08/2024 பார்க்க (176 KB)
கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பத்தை சுய பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில், ஜூலை 22 முதல் ஜூலை 27 வரை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுயமாக கர்ப்பத்தை பதிவு செய்யும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

22/07/2024 27/07/2024 பார்க்க (52 KB)
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களால் பந்தலூர் வட்டத்தில் 24.07.2024 அன்று நடைபெறவுள்ளது.

24/07/2024 25/07/2024 பார்க்க (38 KB)
அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வாடிக்கையாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக்  கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 30.06.2024 அன்று முடிவடையும் காலாண்டிற்கான டாக் அதாலத் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  02.07.2024 அன்று 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

அஞ்சலக சேவை சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக, அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் – 643001என்ற முகவரிக்கு உறை மேல் “வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் சம்பந்தமாக” என்று குறிப்பிட்டு 01.07.2024 க்குள் வந்து சேரும்படி, அனுப்பி வைக்க இதன் மூலம் கோரப்படுகிறது.

02/07/2024 02/07/2024 பார்க்க (703 KB)
பத்ம விருதுகள் 2025

2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்க்ப்படுகின்றன.

11/06/2024 30/06/2024 பார்க்க (147 KB)
ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள் – 2024

2024-ம் ஆண்டிற்க்கான சுதந்திர தினத்தன்று ஜீவன் ரக்க்ஷா பதக்கவிருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

13/06/2024 30/06/2024 பார்க்க (33 KB)
திருநங்கையர்களுக்கான ஒருநாள் சிறப்பு முகாம்

சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் ஒரே நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பொருட்டு நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில் 21.06.2024 அன்று கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருநங்கையர்களுக்கான ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

21/06/2024 21/06/2024 பார்க்க (105 KB)
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயம் அமர்வு

மாண்புமிகு திரு.நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ், நீதிபதி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயம், 18.06.2024 மற்றும் 19.06.2024 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு குன்னூர் மவுண்ட் ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் காலை 10.00 மணி முதல் அமர்வு நடைபெறும். சாட்சியமளிக்க ஆர்வமுள்ள அனைவரும், கீழே கையொப்பமிடப்பட்டவர்களிடம் தங்கள் பிரமாணப் பத்திரங்களை (இரண்டு நகலில்) தாக்கல் செய்யலாம் மற்றும் மாண்புமிகு தீர்ப்பாயத்தில் குறுக்கு விசாரணைக்காக மேற்கண்ட தேதியில் நேரில் ஆஜராக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

18/06/2024 19/06/2024 பார்க்க (203 KB)