மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
வட்டார ஒருங்கிணைப்பாளர்

குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டாரத்தில் தற்போது காலியாக உள்ள இரண்டு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்காணும் தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணபங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், 1பி பிளாக், கூடுதல் மாவட்டஆட்சியர் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை, நீலகிரிமாவட்டம் 643 005 என்ற முகவரிக்கு 28.08.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

22/08/2023 28/08/2023 பார்க்க (49 KB)
ஆவின் பிரீமியம் பசும்பால் (500 மி.லிட்டர்) பாக்கெட் மெஜந்தா நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும்

நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்/ உதகமண்டலம் ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் பிரீமியம் பசும்பால் (500 மி.லிட்டர்) பாக்கெட் தற்போதைய நிறமான இளஞ்சிவப்பு நிறத்திற்கு பதிலாக நாளை 11.08.2023 முதல் 22.08.2023 வரை மெஜந்தா நிற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அப்பாலின் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை (தரம் 3.5% மற்றும் 8.5%) என ஆவின் பொது மேலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

11/08/2023 22/08/2023 பார்க்க (121 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் யூடிஐடி அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 100 வது பிறந்த நாளை ஒட்டி, 100 சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்துதல் – நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் யூடிஐடி அட்டை வழங்கும் சிறப்பு முகாம் 22.08.2023 அன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மைய கட்டிடம் தரை தளத்தில் நடைபெறுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தகவல்

22/08/2023 22/08/2023 பார்க்க (37 KB)
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம் ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்படும்.

18/08/2023 20/08/2023 பார்க்க (38 KB)
உதகை துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தம்

உதகை துணை மின் நிலையம் மற்றும் அதன் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் 19.08.2023 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளதால் மின் விநியோகம் வழங்க இயலாது என நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.வில்வராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.

19/08/2023 19/08/2023 பார்க்க (296 KB)
ஜெகதளா துணை மின் நிலையத்தில் அன்று மின் விநியோகம் நிறுத்தம்

ஜெகதளா துணை மின் நிலையத்;தில 19.08.2023 அன்று காலை 09-00 மணி முதல் மாலை 05-00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் வழங்க இயலாது என நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.வில்வராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.

19/08/2023 19/08/2023 பார்க்க (418 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் 18.08.2023 அன்று காலை 11.00 மணி அளவில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

18/08/2023 18/08/2023 பார்க்க (47 KB)
சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர்

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர்(Legal cum Probation Officer) பணியினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

02/08/2023 18/08/2023 பார்க்க (68 KB)
தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள்

நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர் தற்காலிகமாக தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

11/08/2023 18/08/2023 பார்க்க (45 KB)
இந்திய விமானப்படையின் அக்னி வீர்வாயு வேலைவாய்ப்பு திட்டம்

இந்திய விமானப்படையின் 01/2024 அக்னி வீர்வாயு (Agniveervayu) வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியில் இணைய விருப்பமுள்ள (ஆண் மற்றும் பெண் ஆர்வலர்கள் தங்களின் விண்ணப்பங்களை 17.08.2023 வரை இணையதளம் மூலமாக இந்திய விமானப்படை https://agnipathvayu.cdac.in என்ற வளைதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

03/08/2023 17/08/2023 பார்க்க (38 KB)