• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 2023-ம் மாதத்தில் 22.09.2023 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

22/09/2023 22/09/2023 பார்க்க (45 KB)
அகில இந்திய தொழிற்தேர்வு

2024 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள  தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

13/09/2023 18/09/2023 பார்க்க (59 KB)
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 2023

2023-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

28/07/2023 15/09/2023 பார்க்க (35 KB)
தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலையினை பழுது பார்க்கும் பணிகள் வன துறை மூலமாக 11.09.2023 முதல் 13.09.2023 வரை (திங்கள், செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய மூன்று நாட்களில் நடைபெற உள்ளது.
ஆகையால் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் அனுமதி இல்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

11/09/2023 13/09/2023 பார்க்க (17 KB)
அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12000/- பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000/- மாதத் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப் பெற்றுள்ளது.

01/09/2023 06/09/2023 பார்க்க (53 KB)
அரசு பழங்குடியினர் நல பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்

நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலை/உயர்நிலை/நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12000/- பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000/- மாதத் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப் பெற்றுள்ளது.

02/09/2023 06/09/2023 பார்க்க (45 KB)
சமூக நல தனியாளர்

நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-க்கு சமூக நல தனியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

26/08/2023 05/09/2023 பார்க்க (44 KB)
ஓணம் பண்டிகையினை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் 29.08.2023 (செவ்வாய் கிழமை) அன்று ஓணம் பண்டிகையினை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.

மேற்கண்ட 29.08.2023 நாளினை ஈடுசெய்ய, எதிர்வரும் 16.09.2023 (சனிக்கிழமை) அன்று இம்மாவட்டத்திற்க்கு பணி நாளாக இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

29/08/2023 29/08/2023 பார்க்க (45 KB)
கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருத்துவ முகாம்கள்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில், ஆய்வு பணிகளை மேற்கொண்ட பொழுது கறவை மாடுகளின் பால் உற்பத்தி மேம்பட அனைத்து கறவை மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதைத் தொடர்ந்து கறவை மாடுகளின் உடல் நலத்தைப் பேணவும், பால் உற்பத்தியை பெருக்கிடவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருத்துவ முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களில் எதிர்வரும் 21.08.2023 முதல் 28.08.2023 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே கால்நடைகளை வளர்க்கும் அனைத்து விவசாய பெருமக்களும் தவறாது கலந்து கொண்டு இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருத்துவ சிகிச்சியினை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளர்.

21/08/2023 28/08/2023 பார்க்க (26 KB)
வட்டார ஒருங்கிணைப்பாளர்

குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டாரத்தில் தற்போது காலியாக உள்ள இரண்டு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்காணும் தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணபங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், 1பி பிளாக், கூடுதல் மாவட்டஆட்சியர் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை, நீலகிரிமாவட்டம் 643 005 என்ற முகவரிக்கு 28.08.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

22/08/2023 28/08/2023 பார்க்க (49 KB)