மூடு

RAC அறிவியல் தினம், 28 பிப்ரவரி 2026 (சனிக்கிழமை) ரேடியோ வானியல் மையம் (RAC), NCRA-TIFR,  உதகமண்டலம். 

வெளியிடப்பட்ட தேதி : 26/02/2026
நம் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம், நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமனின், “ராமன் விளைவு”  கண்டுபிடிப்பை கௌரவிக்கும் தினமாகும். இந்த ஆண்டு தேசிய அறிவியல் தினத்திற்கான முன்னேற்பாடுகள் ரேடியோ வானியல் மையத்தில் (RAC) முழு வேகத்தில் நடந்து வருகின்றன. இந்த மையம் தேசிய வானியற்பியல் மையம் (NCRA), டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR)  ஆகியவற்றின் கீழ் செயல்படும் ஒரு ஆராய்ச்சி மையம் ஆகும். இது முத்தோரை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. RAC (Radio Astronomy Centre), மையம் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கிகளில் ஒன்றான “ஊட்டி ரேடியோ தொலைநோக்கி (Ooty Radio Telescope) யை இயக்குகிறது. இந்த தொலைநோக்கி பல முக்கியமான வானியல் மற்றும் வானியற்பியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. RAC நடத்தும் தேசிய அறிவியல் தின நிகழ்வின் முக்கிய நோக்கம், மாணவ மாணவிகளிடையே அறிவியல் கல்வியை ஊக்குவிப்பதும், பொதுபக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை உயர்த்துவதும் ஆகும்.