மூடு

இந்த இடம் ஊட்டியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ள மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளது. இந்த வழியில்தான் எமரால்டு வனம் உள்ளது.

இந்த இடத்திற்குச் செல்லும் ஒவ்வொரு திருப்பத்திலிருந்தும் பார்த்தால் அற்புதமான அழகிய வனக் காட்சிகள் தெரியும். அவலாஞ்சி என்று அழைக்கப்படும் இந்தக் குன்றின் மீது நின்று பார்த்தால் நீண்டு வளைந்து நீர்க்கோடு போல் ஓடும் நதியும் பசுமையின் குவியலாய்த் தோற்றமளிக்கும் பள்ளத்தாக்கும் குளிர்ந்த நீர்த்தேக்கங்களும் பளிச்செனத் தெரியும்.

புகைப்பட தொகுப்பு

  • தேயிலை தோட்டங்களுடன் அவலாஞ்சி ஏரி
  • அவலாஞ்சி ஏரி
  • அவலாஞ்சி வனப்பகுதி காட்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம்.

தொடர்வண்டி வழியாக

ஒரு மீட்டர் கேஜ் பாதை உதகையை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது.

சாலை வழியாக

உதகை பேருந்து நிலையத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது