தொட்டபெட்டா
வழிகாட்டுதல்தொட்டபெட்டா என்ற சொல்லின் மூலம் கன்னடம் / படுக மொழி ஆகும். கன்னடம் / படுக மொழியில் தொட்ட என்றால் பெரிய, பெட்டா என்றால் மலை. எனவே பெரிய மலை எனப் பொருள்படும் படி இது தொட்டபெட்டா என்று அழைக்கப் படுகிறது.
புகழ்பெற்ற மலைச்சிகரம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும், 2466 மீ உயரமுள்ள எல்க்ஹில்லும் உள்ளன. இந்தச் சிகரங்களுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குதான் உதகமண்டலம். ஊட்டியிலிருந்து 10 கி.மீட்டரில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் கிழக்கு – தென் கிழக்காக அமைந்துள்ளது. மேற்கு நிலப் பகுதியில் வடக்கு தெற்காக நீளும் மலைத்தொடரில் தொட்டபெட்டாதான் உயரமான சிகரம்.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம்.
தொடர்வண்டி வழியாக
ஒரு மீட்டர் கேஜ் பாதை உதகையை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது.
சாலை வழியாக
உதகை பேருந்து நிலையத்திலிருந்து 10 k.m தொலைவில் உள்ளது