மூடு

பழங்குடியினர் அருங்காட்சியகம்

வழிகாட்டுதல்

பழங்குடியினர் அருங்காட்சியகம், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், மு.பாலாடா, பழங்குடியினர் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ளது. பழங்குடியினர் அருங்காட்சியக கட்டிட கட்டுமான பணி செப்டம்பர் 12, 1989ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1995ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆக்டோபர் 2, 1995 முதல் பழங்குடியினர் அருங்காட்சியகம் செயல்படத்துவங்கியது. க்ஷசப்டம்பர் 13, 1995 முதல பழங்குடியினர் ஆய்வு மையம் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை கழகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. உதகமண்டலம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையத்திலிருந்து அவலாஞ்சி சாலையில் 10 கி,மீ, தொலைவில் உள்ள பழடங்குடியினர் ஆய்வு மைய வளாக்ததில் “பழங்குடியினர் அருங்காட்சியகம்“ அமைந்துள்ளது. பழங்குடியினர் அருங்காட்சியகம் சுற்றுலாப்பயணிகளுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் முக்கியமான சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது.

பழங்குடியினர் அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமானது, பழங்குடியினரின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பதாகும். பழங்குடியினர் அருங்காட்சியகத்தில தமிழ்நாட்டில் வாழும் 36 வகை பழங்குடியினரின் பாரம்பரியம், கலாச்சாரம் சாhந்த கலைப்பொருட்களான ஆபரணங்கள், வேட்டைக் கருவிகள், அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள், மூங்கில் கூடைகள், பழங்குடியினர் மாதிரி வீடுகள், விவசாய கருவிகள், மீன்பிடி சாதனங்கள், அதிய புகைப்படங்கள், சிறப்ங்கள், மாதிரி கோயில்கள் மற்றும் மூலிகை மற்றும் சிறு வன பொருட்கள் காடசிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் இதர மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினரின் புகைப்படங்கள் மற்றும் அந்தமான நிக்கோபர் தீவுகளில் வாழும் பழங்குடியினரின் புகைப்படங்களும் உள்ளன.

பழங்குடியினர் அருங்காட்சியகம் அருகில் சுற்றுலா இடங்களாக எமரால்டு அணை, அவலாஞ்சி மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் மையங்களும் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் தேசிய மற்றும் அயல்நாட்டு பார்வையாளர்களையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

கட்டணம்

  1. பெரியவர்கள் – ரூ. 5/-
  2. சிறியவர் (16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்) – கட்டணமில்லை
  3. அயல்நாட்டவர் – ரூ.100/-

பழங்குடியினர் அருங்காட்சியகம் அனைத்து அரசு பணி நாடகளிலும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படுகிறது. மிதிய உயவு இடைவேலை 1.00 முதல் 2.00 மணி வரை ஆகும்.

மேலும் தொடர்புக்கு
இயக்குநர்,
பழங்குடியினர் ஆய்வு மையம்,
பழங்குடியினர் நலத்துறை,
மு.பாலாடா (அஞ்சல்)
உதகமண்டலம் – 643 004
நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு
தொலைபேசி – 0423/2550350 பேக்ஸ்-0423-2550360
மின் அஞ்சல்- trcooty[at]gmail[dot]com

புகைப்பட தொகுப்பு

  • பழங்குடியினர் அருங்காட்சியகம்
  • பழங்குடியினர் வாழ்க்கை முறை சட்டம்
  • காட்டுநாயக்கர்களின் மாதிரி வீடு

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம்.

தொடர்வண்டி வழியாக

ஒரு மீட்டர் கேஜ் பாதை உதகையை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது.

சாலை வழியாக

உதகை பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது