மூடு

ரோஜா பூங்கா

வழிகாட்டுதல்

உதகை மலர்க் கண்காட்சியின் நூற்றாண்டினை ஒட்டி உதயமானதே உதகை ரோஜாத் தோட்டம். ஐந்து அடுக்குகளைக் கொண்ட இத்தோட்டம் 4 எக்டர் பரப்பிலானது. இப்பூங்காவானது எல்க் குன்றின் சரிவில் அமைந்துள்ள விஜயநகரம் பண்ணையின் வடமேற்குப் பகுதியில் உதகை நகரை நோக்கும் வகையில் அமைந்துள்ளது.

பெங்களூரு, சண்டிகர், கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஊட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட 3800 இரகங்களைச் சார்ந்த 25,000 ரோஜாச் செடிகள் இத்தோட்டத்தில் தழைத்துள்ளன. புளோரிபன்டா, பாலியான்த்தா, குறு ரோஜாக்கள், கலப்பின ரோஜாக்கள் மற்றும் கொடி ரோஜா போன்றவை இதில் அடங்கும்.  அலங்கார வளைவுகள், கொடிப்பந்தல், கொடிக்குகைகள், நிழற்குடைகள், பசுமைக்குடில்கள், நீருற்றுகள், நிலா மாடம், கற்கூண்டு விளக்குகள் மற்றும் பாறைத் தோட்டம் ஆகிய சிறப்பான அம்சங்களையும் இப்பூங்கா தன்னகத்தே கொண்டுள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • ரோஜா பூங்கா நுழைவுவாயில்
  • உதகை ரோஜா பூங்காவில் பூத்திருக்கும் அழகிய ரோஜா மலர்கள்
  • உதகை ரோஜா பூங்கா

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம்.

தொடர்வண்டி வழியாக

ஒரு மீட்டர் கேஜ் பாதை உதகையை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது.

சாலை வழியாக

உதகை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது