மூடு

லேம்ஸ் பாறை

வழிகாட்டுதல்

குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் டால்பின் நோஸ் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இப்பாறைக்கு ‘லேம்ஸ் பாறை’ என்று பெயர் சூட்டிப் பெருமை கொண்டவர் அந்நாளைய ஆட்சித் தலைவர் திரு. இ.பி. தாமஸ். இவர் இப்பகுதிக்குப் பாதை அமைத்துப் பரவசப் படுத்திய ‘கேப்டன் லேம்ப்’ அவர்களின் நினைவு நிலைத்துநிற்க ‘லேம்ஸ் பாறை’ எனப் பெயரிட்டார்.

கொடுஞ்சரிவு மற்றும் செங்குத்து வீழ்வு ஆகிய மலைப் பகுதியின் மீது கரடு முரடான பாறைக் கற்களைத் தாங்கி தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அதிசிய மலையின் அற்புத முனைப்பகுதி பல நூறு அடிகளுக்கு கீழமைந்த வனப்பு மிகு வனப்பகுதியில் புதைந்திருப்பது புரட்சி படைக்கும் புதுமை.

இப்பாறையின் வலதுபுறம் அமைந்த உலிக்கல் ஆழ்பள்ளத்தாக்கின் அழகு, 5000 அடிக்குக்கீழ் ஆர்ப்பரித்துக் கொட்டும் குன்னூர் அருவி, கொடுஞ்சரிவான இச்செங்குத்து மலையிலிருந்து காணக்கிடைக்காத கோவை சிறப்புச் சமவெளிப் பகுதியின் சிந்தை கவர் காட்சி ஆகிய அனைத்துக் காட்சிகளும் கருத்தைக் கவரும் காட்சிகளே.

புகைப்பட தொகுப்பு

  • லேம்ஸ் பாறை
  • லேம்ஸ் பாறையிலிருந்து கோத்தகிரி சாலையின் காட்சி
  • லேம்ஸ் பாறையின் காட்சி முனை

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம்.

தொடர்வண்டி வழியாக

ஒரு மீட்டர் கேஜ் பாதை குன்னூர்யை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது.

சாலை வழியாக

குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது