- முகப்பு பக்கம்
- காணத்தக்க இடங்கள் – குன்னூர்
காணத்தக்க இடங்கள் – குன்னூர்
பழங்குடியினர் அருங்காட்சியகம்
பழங்குடியினர் அருங்காட்சியகம், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், மு.பாலாடா, பழங்குடியினர் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ளது. பழங்குடியினர் அருங்காட்சியக கட்டிட கட்டுமான பணி செப்டம்பர் 12, 1989ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1995ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆக்டோபர் 2, 1995 முதல் பழங்குடியினர் அருங்காட்சியகம் செயல்படத்துவங்கியது. க்ஷசப்டம்பர் 13, 1995 முதல பழங்குடியினர் ஆய்வு மையம் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை கழகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் […]
லேம்ஸ் பாறை
குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் டால்பின் நோஸ் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இப்பாறைக்கு ‘லேம்ஸ் பாறை’ என்று பெயர் சூட்டிப் பெருமை கொண்டவர் அந்நாளைய ஆட்சித் தலைவர் திரு. இ.பி. தாமஸ். இவர் இப்பகுதிக்குப் பாதை அமைத்துப் பரவசப் படுத்திய ‘கேப்டன் லேம்ப்’ அவர்களின் நினைவு நிலைத்துநிற்க ‘லேம்ஸ் பாறை’ எனப் பெயரிட்டார். கொடுஞ்சரிவு மற்றும் செங்குத்து வீழ்வு ஆகிய மலைப் பகுதியின் மீது கரடு முரடான பாறைக் கற்களைத் தாங்கி தொங்கிக் கொண்டிருக்கும் […]
டால்பின் நோஸ்
குன்னூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ‘டைகர் ஹில்’ பகுதிக்கு அண்மையில் அமைந்த அற்புதம் கலந்த பாறை மலையான இம்மலை தன் முகத்தை வெளிப்பக்கம் நீட்டி டால்பினின் மூக்கு போல் அமையப் பெற்றது தான் இதன் பெயர்க்காரணம். இம்மலையின் வலது மற்றும் இடது புறங்களில் பரவசமூட்டும் பள்ளத்தாக்குகள், மறுபக்கத்தில் கோத்தகிரிப் பகுதியின் கேத்தரின் நீர்வீழ்ச்சியும், குன்னூரின் நீரோடையும் சங்கமிக்கும் காட்சி, மேலும் இவ்விரண்டும் பணிவுடனே பவானி ஆற்றில் கலக்கும் சிறப்பு ஆகியன கவின்மிகு காட்சிகளாகும்.
சிம்ஸ் பூங்கா
குன்னூரிலுள்ள சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டு துவக்கப்பெற்று செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது. 12.14 எக்டர் பரப்பில் மேடு பள்ளங்கள் உடைய நிலப்பகுதியுடனும் பல்வேறு விரும்பத்தக்க அம்சங்களுடனும் இப்பூங்கா அமைந்துள்ளது. நகரத்தின் ஈர்ப்புமிக்க மையப் பகுதியில் அமைந்துள்ளதால் பார்வையாளர் எவரும் இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்காவினைப் பார்த்து மகிழும் வாய்ப்பினை நழுவ விடுவதில்லை. இப்பூங்காவில் 86 தாவரக் குடும்பங்களை சார்ந்த […]



