மூடு

காணத்தக்க இடங்கள் – உதகை

பழங்குடியினர் அருங்காட்சியகம்

பழங்குடியினர் அருங்காட்சியகம், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், மு.பாலாடா, பழங்குடியினர் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ளது. பழங்குடியினர் அருங்காட்சியக கட்டிட கட்டுமான பணி செப்டம்பர் 12, 1989ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1995ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆக்டோபர் 2, 1995 முதல் பழங்குடியினர் அருங்காட்சியகம் செயல்படத்துவங்கியது. க்ஷசப்டம்பர் 13, 1995 முதல பழங்குடியினர் ஆய்வு மையம் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை கழகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் […]

பைகாரா நதி மற்றும் நீர்வீழ்ச்சி

இம்மாவட்டத்திலேயே பெரிய ஆறு இதுதான். இந்தப் பகுதியின் பூர்வகுடிகளான தோடர் இனப் பழங்குடி மக்கள் இதைப் புனித நதியாகப் போற்றுகின்றனர். முக்குர்தியின் உச்சியிலிருந்து புறப்படும் இந்த பைகாரா ஆறு வடக்குப் பக்கமாகப் பரவி ஓடுகிறது. இந்தப் பகுதியின் முனையைத் தொடும் இடத்தில் மேற்காகத் திரும்புகிறது. இடையில் பல இடங்களில் அருவியாகக் கீழிறங்குகிறது. கடைசியாக இரண்டாகப் பிரிந்து விழும் இடத்துக்குத் தான் பைகாரா அருவிகள் என்று அழைக்கின்றனர். இதில் ஒன்று 55 மீட்டர் உயரத்தில் இருந்தும் இன்னொன்று 61 […]

அவலாஞ்சி

இந்த இடம் ஊட்டியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ள மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளது. இந்த வழியில்தான் எமரால்டு வனம் உள்ளது. இந்த இடத்திற்குச் செல்லும் ஒவ்வொரு திருப்பத்திலிருந்தும் பார்த்தால் அற்புதமான அழகிய வனக் காட்சிகள் தெரியும். அவலாஞ்சி என்று அழைக்கப்படும் இந்தக் குன்றின் மீது நின்று பார்த்தால் நீண்டு வளைந்து நீர்க்கோடு போல் ஓடும் நதியும் பசுமையின் குவியலாய்த் தோற்றமளிக்கும் பள்ளத்தாக்கும் குளிர்ந்த நீர்த்தேக்கங்களும் பளிச்செனத் தெரியும்.

கிளன்மார்கன்

ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடம் சிறந்த புவியியல் அமைப்பைக் கொண்டது இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கார மின் நிலையத்துக்கு வின்ச் மூலம் அதன் பணியாளர்கள் செல்கிறார்கள். அருகிலிருக்கும் ஏரி , சிங்கரா மற்றும் முதுமலை சரணாலயத்தில் அற்புத அழகை இங்கிருந்து ரசிக்கலாம்

உதகை ராஜ்பவன்

தமிழ்நாட்டின் ஆளுநரின் கோடைகால இல்லமான ஊட்டி ராஜ் பவன்  ஊட்டி நகரில் அமைந்துள்ளது வரலாறு 1876 ​​ஆம் ஆண்டில், லோரன்ஸ் அசைலம் அறக்கட்டளைக்கு சொந்தமான அப்பர் நார்வுட் மற்றும் லோயர் நார்வுட் பகுதியை வாங்க அரசாங்கம் முடிவு செய்து, உதகை யில் அரசாங்க மன்றத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. டூக் ஆஃப் பக்கிங்ஹாம் , அப்பர் அண்ட் லோவர் நார்வுட் மற்றும் கார்டன் குடிசை ஆகிய இரண்டையும் வாங்கினார். டூக் சென்னை சென்று பெரிய இரண்டு அடுக்கு […]

தொட்டபெட்டா

தொட்டபெட்டா என்ற சொல்லின் மூலம் கன்னடம் / படுக மொழி ஆகும். கன்னடம் / படுக மொழியில் தொட்ட என்றால் பெரிய, பெட்டா என்றால் மலை. எனவே பெரிய மலை எனப் பொருள்படும் படி இது தொட்டபெட்டா என்று அழைக்கப் படுகிறது. புகழ்பெற்ற மலைச்சிகரம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும், […]

உதகை ஏரி படகு இல்லம்

ஊட்டியின் முதல் ஆணையராக இருந்த ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஏரி. 1824 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஏரி இப்போதும் ரம்மியத்தோடு காட்சி அளிக்கிறது. பெடல் படகுகள், ரோ படகுகள், அக்குவா பைக்குகள் போன்றவற்றை இந்த ஏரியில் ஓட்டி மகிழலாம்.  தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இந்தப் படகு இல்லம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ரோஜா பூங்கா

உதகை மலர்க் கண்காட்சியின் நூற்றாண்டினை ஒட்டி உதயமானதே உதகை ரோஜாத் தோட்டம். ஐந்து அடுக்குகளைக் கொண்ட இத்தோட்டம் 4 எக்டர் பரப்பிலானது. இப்பூங்காவானது எல்க் குன்றின் சரிவில் அமைந்துள்ள விஜயநகரம் பண்ணையின் வடமேற்குப் பகுதியில் உதகை நகரை நோக்கும் வகையில் அமைந்துள்ளது. பெங்களூரு, சண்டிகர், கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஊட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட 3800 இரகங்களைச் சார்ந்த 25,000 ரோஜாச் செடிகள் இத்தோட்டத்தில் தழைத்துள்ளன. புளோரிபன்டா, பாலியான்த்தா, குறு ரோஜாக்கள், கலப்பின ரோஜாக்கள் மற்றும் கொடி ரோஜா போன்றவை […]

தாவரவியல் பூங்கா

எங்கு பார்த்தாலும் மலர்கள்… செடிகள்… மூலிகைகள்… அரிய வகைத் தாவரங்கள் என கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் இந்தத் தாவரவியல் பூங்கா 1847-67 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 2400 முதல் 2500 அடி வரை உயரத்தில் அமைந்திருக்கும் இந்த அழகிய தோட்டம் மலைச்சரிவை ஒட்டி இருக்கிறது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர். தொலைபேசி-0423-2442545.