மூடு

செ.வெ.எண்:240 – ஆய்வுக்கு வராத வேட்பாளர்களுக்கும் வரவு செலவுக் கணக்கில் வித்தியாசம் உள்ள வேட்பாளர்களுக்கும் விளக்கம் கேட்புக் குறிப்பாணை வழங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 11/04/2024

இந்தியத்தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் – 2024-ற்கு அறிவிப்பு வெளியான பின்னர் 19 நீலகிரி (தனி) பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு செலவினப் பார்வையாளர்கள் செலவினம் தொடர்பான ரசீதுகள் மற்றும் பதிவேடுகளை 08.04.2024, 12.04.2024 மற்றும் 17.04.2024 ஆகிய நாட்களில் ஆய்வு செய்வதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக 08.04.2024 அன்று செலவினக் கணக்குகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். மேற்படி, நாளில் ஆய்வுக்கு வராத வேட்பாளர்களுக்கும் வரவு செலவுக் கணக்கில் வித்தியாசம் உள்ள வேட்பாளர்களுக்கும் விளக்கம் கேட்புக் குறிப்பாணை வழங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
(PDF 24KB)