மூடு

தேர்தல்-2024

வடிகட்டு:
PR NO 265 0124

செ.வெ.எண்:265 – உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2024

19-நீலகிரி (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கான பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள ஸ்ட்ராங் ரூமில், சீல் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவல்துறையினரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 118KB)

மேலும் பல
P.R.NO. 255 - 0124

செ.வெ.எண்:255 – வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2024

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.மஞ்சித் சிங் பரார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது.(PDF 99KB)

மேலும் பல
P.R.NO. 254 - 0124

செ.வெ.எண்:254 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/04/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, உதகை மற்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 22KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:253 – கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2024

இந்தியத்தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் – 2024-ற்கு அறிவிப்பு வெளியான பின்னர் 19 நீலகிரி (தனி) பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு செலவினப் பார்வையாளர்கள் செலவினம் தொடர்பான ரசீதுகள் மற்றும் பதிவேடுகளை 08.04.2024, 12.04.2024 மற்றும் 17.04.2024 ஆகிய நாட்களில் ஆய்வு செய்வதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.(PDF 39KB)

மேலும் பல
P.R.NO. 252 - 0124

செ.வெ.எண்:252 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனுப்பும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 36KB)

மேலும் பல
P.R.NO. 251 - 0124

செ.வெ.எண்:251 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 32KB)

மேலும் பல
P.R.NO. 250 - 0124

செ.வெ.எண்:250 – வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணி

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024

செ.வெ.எண். 250 நாள் – 17.04.2024 நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள் தேர்தல் பொது பார்வையாளர் திரு.மஞ்சித்சிங் பரார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 110KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:249 – நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024

நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல் (PDF 100KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:248 – இந்தியத் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ள பின்வரும் கட்டுப்பாடுகள் நாளை (17.04.2024) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை அமலில் இருக்கும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. (PDF 204KB)

மேலும் பல
P.R.NO. 247 - 0124

செ.வெ.எண்:247 – தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை சீரற்ற மயமாக்கல் பணி

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024

நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்குபட்பட்ட 108-உதகமண்டலம், 109-கூடலூர்(தனி) மற்றும் 110- குன்னூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை சீரற்ற மயமாக்கல் பணிகள் தேர்தல் காவல் பார்வையாளர் திரு.பிரதாப் கோபேந்திர யாதவ் இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 114 KB)

மேலும் பல