மூடு

செ.வெ.எண்:244 – கேரளா மாநிலத்தில் எதிர்வரும் 26.04.2024 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் கேரளா மாநில எல்லைப் பகுதியை ஒட்டி 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், ஓட்டல் பார் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2024

கேரளா மாநிலத்தில் எதிர்வரும் 26.04.2024 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், கேரளா மாநில எல்லைப் பகுதியை ஒட்டி 5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள் 8215 – தாளுர், 8235 -அய்யங்கொல்லி, 8411 – நம்பியார்குன்னு, 8447 – எருமாடு மற்றும் சமுத்திரா ரீஜென்ஸி எப்.எல்.3 பார் ஹோட்டல் எருமாடு, பந்தலூர் ஆகியவற்றை எதிர்வரும் 24.04.2024 காலை 10.00 மணி முதல் 26.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரையிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாட்களில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், ஓட்டல் பார் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டிருக்கும். எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
(PDF 40KB)