செ.வெ.எண்:219 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 02/04/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, பேருந்து, ஆட்டோ மற்றும் எரிவாயு உருளைகளில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 35KB)