மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:618- உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு காப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தற்காலிகமாக தேர்வு செய்தல்

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025

நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு காப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தற்காலிகமாக தேர்வு செய்தல்.(PDF 151KB)

மேலும் பல
04

செ.வெ.எண்:617- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை வட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம் நஞ்சநாடு ஊராட்சிக்குட்ட பகல்கோடு மந்து சமுதாய கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை,மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 225KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:616- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தோடர் எருமைப் பால் மதிப்புக்கூட்டு மையத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தோடர் எருமைப் பால் மதிப்புக்கூட்டு மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 140KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:615- 4வது புத்தகத் திருவிழா – 2025

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடந்தும் 4வது புத்தகத் திருவிழா உதகமண்டலம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அக்டோபர் மாதம் 24-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 2-ம்தேதி வரை 10 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.(PDF 144KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:614- 11.10.2025 அன்று காந்தி ஜெயந்தி தின கிராம சபைக் கூட்டம் நடைபெறுதல்

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025

11.10.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணியளவில் காந்தி ஜெயந்தி தின கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 32KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:613- நீலகிரி மாவட்டத்தில் 09.10.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025

09.10.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: கூடலூர் வட்டம், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 10, 12, 13, 14, 15,16,17 மற்றும் 18 -ற்கான முகாம் பாடாந்தொரை க்ரவுண் ப்ளாஸா ஆடிட்டோரியத்திலும், உதகமண்டலம் வட்டம், தும்மனட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் மடித்தொரை சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது.(PDF 46KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:612- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் குன்னூர் வட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் ஜெயின் திருமண மண்டபத்தில், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில்; 195 பயனாளிகளுக்கு ரூ.2.25 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 118KB)  

மேலும் பல

செ.வெ.எண்:611- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் உபதலை ஊராட்சியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் உபதலை ஊராட்சி பழத்தோட்டம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.82 இலட்சம் மதிப்பில் கட்டப்படட புதிய பகுதி நேர நியாய விலைக்கடையினை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறாடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.(PDF 111KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:610- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் உதகை ரோஜா பூங்கா வளாகத்தில் கட்டப்பட்ட புதிய மதி அங்காடி மற்றும் விற்பனை மையத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்கா வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ரூ.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மதி அங்காடி மற்றும் விற்பனை மையத்தினை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 109KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:609- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் “வன உயிரின வார விழா” கொடி அணிவகுப்பு பேரணியை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், வனத்துறை சார்பில், “வன உயிரின வார விழா” (02.10.2025 முதல் 08.10.2025) முன்னிட்டு நடைபெற்ற கொடி அணிவகுப்பு பேரணியை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 103KB)  

மேலும் பல