ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:443- விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண் இயந்திரமயமாக்குதல் துணை இயக்கத்திட்டம் 2026-27-ன்கீழ் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற்றுப் பயன்பெறலாம். (PDF 62KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:442- ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு கீழ்க்கண்ட பணியிடத்திற்கு 3 பணியாளரை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால் ,தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 50KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.441- முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலை வாய்ப்பு கருத்தரங்கு மற்றும் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

நீலகிரி மாவட்டத்தைச்சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு பிங்கர் போஸ்ட்டில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நடைபெறவுள்ளது. (PDF 45KB)

DSC_0489 copy

செ.வெ.எண்.440- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (07.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 225 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 28KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:439- விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். (PDF 60KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:438 – விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.09.2026 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர்-2026ம் மாதத்தில் 18.09.2026 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 58KB)

1 copy

செ.வெ.எண்.437 – சதுப்பு நிலங்களை மீட்டெடுத்து, சமூக பங்கேற்புடன் வலுப்படுத்தும் வகையில் சோலைத் திட்டத்தின் கீழ் (Project Shola) நாற்றங்கால் பண்ணையினை, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று (03.09.2026) துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம் மஞ்சூர் சாலை தொட்டகொம்பை பகுதியில், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்து, சமூக பங்கேற்புடன் வலுப்படுத்தும் வகையில் சோலைத் திட்டத்தின் கீழ் (Project Shola) நாற்றங்கால் பண்ணையினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) துவக்கி வைத்தார். (PDF 70KB)  

1 copy

செ.வெ.எண்.436 – நியாய விலைக் கடையில், குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று (03.09.2026) துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

நீலகிரி மாவட்டம், உதகை ஹெச்.பி.எப் இந்து நகர் நியாய விலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் இன்று (03.09.2026) துவக்கி வைத்தார். (PDF 46KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.435 – போட்டித் தேர்வு பயிற்றுநர்கள் தேவை – விண்ணப்பிக்க அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026

2026ம் ஆண்டிற்க்கான புதிய பயிற்றுநர்கள் மத்திய/மாநில அரசு போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டத்தின்படி பொது அறிவு ,கணிதம் மற்றும் மனத்திறன் ,பொதுத் தமிழ், ஆங்கிலம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பாடத்தலைப்புகளில் தேர்வு செய்யப்படவுள்ளது. எனவே விருப்பமுள்ள பயிற்றுநர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு (Resume), கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் மற்றும் முகவரிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் கூடிய விண்ணப்பத்தை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பிங்கர் போஸ்ட், உதகமண்டலம் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம். (PDF 54KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.434 – சுற்றுலாத்துறை விருதுகள் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையின் மூலம் அனைத்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சுற்றுலா தொழில் முனைவோர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் www.tntourismawards.com என்கிற இணைய தள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.  (PDF 67KB)