ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:433- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் செப்டம்பர் 2026 மாதத்திற்கு  05.09.2026 மற்றும் 07.09.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 47KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:432- கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் முதிர் கன்னிகள் தங்கள் விவரங்களை வலைதளத்தில் புதிதாக பதிவு செய்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

தமிழ்நாட்டில் கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்டபெண்கள்,முதிர் கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைக் களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளை கல்வி,சுகாதாரம்,வேலைவாய்ப்பு, சுய உதவிக் குழுக்கள்அமைப்பது,தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக ‘தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்” செயல்பட்டு வருகிறது. (PDF 51KB)

Untitled-1 copy

செ.வெ.எண்:431- தமிழ்நாட்டின் நீர்வளங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் இன்று (31.08.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

நீலகிரி மாவட்டம், உதகை ஜெம்பார்க் கூட்டரங்கில், தமிழ்நாட்டின் நீர்வளங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம், நீர்வளக்குழுவின் தலைவர் / நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி அவர்கள் தலைமையில் இன்று (31.08.2026) நடைபெற்றது. (PDF 65KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:430- இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI -Top class education in schools for OBC,EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது. (PDF 59KB)

DSC_0041 copy

செ.வெ.எண்:429- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று (28.08.2026) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 43 நபர்களுக்கு ரூ.3.97 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 39KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:428- நியாய விலைக் கடைகளில் eKYC பதிவு மேற்கொள்ள 29.08.2026 அன்று சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை தங்களது நியாய விலை கடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும்.  (PDF 208KB)

DSC_0979 copy

செ.வெ.எண்:427- சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (27.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும்; பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 44KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:426- மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

நீலகிரி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணிகள் 01.08.2026 முதல் 30.08.2026 வரை 30 நாட்கள் நடைபெற்று வருகின்றன. (PDF 89KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:425- 2026-27 ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

நீலகிரி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத கிராமங்களில் உள்ள கால்நடைகள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் பயன்படத்தக்க வகையில் 2026-27 ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் 72 கிராமங்களில் 24.08.2026 முதல் 20.01.2027 வரை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  (PDF 155KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:424- சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 28.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் (28.08.2026) அன்று காலை 10.00 மணியளவில் உதகை RCTC (பழங்குடியினர் பண்பாட்டு மையம்) கார்டன் சாலை, ஊட்டி, கீழ்தள கூட்ட அரங்கில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.  (PDF 179KB)