• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:339- நீலகிரி மாவட்டத்தில் மீன் வளர்ப்பு தொழில் செய்து வரும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2025

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன் வளர்ப்பு தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1 ஹெக்டேருக்கு 10,000 எண்ணம் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படவுள்ளது.(PDF 106KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:338- நீலகிரி மாவட்டத்தில் 7வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் போடும் பணி 02.07.2025 முதல் 31.07.2025 வரை நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2025

நீலகிரி மாவட்டத்தில், உள்ள சுமார் 21,650 பசு மற்றும் எருமையினங்களை அந்நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்பத்துறை சார்பில், NADCP 7வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் (மாட்டினம் (ம) எருமையினம்) போடும் பணி 02.07.2025 முதல் 31.07.2025 வரை நடைபெற உள்ளது.(PDF 107KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:337- இந்திய அரசின் 2024-ம் வருடத்திற்கான “டென்சிங் நார்கே தேசிய சாகச விருது” வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2025

இந்திய அரசு, ஆண்டுதோறும் ஒருவருக்கு நிலம், நீர் (சமுத்திரம்) மற்றும் ஆகாயத்தில் உயிர் காக்கும் சாகச சாதனை புரிந்தவர்களை கொளரவிக்கும் பொருட்டு 2024-ம் வருடத்திற்கான ‘டென்சிங் நார்கே தேசிய சாகச விருது”க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வருகிறது.(PDF 112KB)

மேலும் பல

செ.வெ.எண்:336- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2025

நீலகிரி மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தொடங்கி வைத்தார்.(PDF 20KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:335- மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் அவர்கள் பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில், மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் திரு.ஸ்ரீ.ஜடோத்து ஹுசைன் அவர்கள், அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழங்குடியின மக்களிடம் கலந்துரையாடி, கோரிக்கைகளை கேட்டறிந்தார்.(PDF 114KB)

மேலும் பல

செ.வெ.எண்:334- அரசு தலைமைக் கொறாடா அவர்கள் பேரார் கிராமத்தில் நடமாடும் நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம்,தும்மனட்டி ஊராட்சி, பேரார் கிராமத்தில், நடமாடும் நியாய விலைக்கடையினை, அரசு தலைமைக் கொறாடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.(PDF 103KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:333- 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்க்ப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025

மேண்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளது.(PDF 51KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:332- மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் அவர்கள் தலைமையில் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025

நீலகிரி மாவட்டத்தில், அரசுத்துறைகளின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் திரு. ஸ்ரீ ஜடோத்து ஹூசைன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 53KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:331- நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை பேச்சுப் போட்டிகள் 04.07.2025 அன்று நடைபெறவுள்ளன

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025

ஜூலை 18ஆம் நாளினை “தமிழ்நாடு நாளாக“ கொண்டாடப்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 04.07.2025 அன்று காலை 10.00 மணிக்கு உதகை சி.எஸ்.ஐ. (சி.எம்.எம்.) மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.(PDF 37KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:330- அஞ்சல் துறையில் நேரடி முகவர்களாக (Agent) பணிபுரிய அரிய வாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025

அஞ்சல் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத்திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நேரடி முகவர்களாக (Agent) பணிபுரிய அரிய வாய்ப்பு சம்பளம் கிடையாது பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.(PDF 66KB)

மேலும் பல