செ.வெ.எண்:314- மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு.(PDF 28KB)
மேலும் பலசெ.வெ.எண்:313- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பர்லியார் ஊராட்சியில் எதிர்பாராத விதமாக மரம் விழுந்து உயிரிழந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025நீலகிரி மாவட்டம் , குன்னூர் வட்டம், பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட சேம்புக்கரை கிராமத்தில், எதிர்பாராத விதமாக மரம் விழுந்து உயிரிழந்த திருமதி.மல்லிகா என்பவரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது கணவர் திரு.குமார் என்பவரிடம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெள்ள நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சம் பெறுவதற்கான ஆணையினையும், வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் ரொக்க தொகையினையும் வழங்கினார்.(PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:312- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் குன்னூர் வட்டம் 18.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பல்வேறு துறைகளின் சார்பில், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, 16 பயனாளிகளுக்கு ரூ.1.52 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:311- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 27KB)
மேலும் பலசெ.வெ.எண்:310- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் பேருந்து வசதி கிடைக்கப்பெறாத மக்கள் பயன்பாட்டிற்காக மினி பஸ் சேவையினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில், போக்குவரத்து துறையின் சார்பில், புதிய விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, பேருந்து வசதி கிடைக்கப்பெறாத மக்கள் பயன்பாட்டிற்காக 5 மினி பேருந்துகளின் சேவையினை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்; திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், கொடியசைத்து துவக்கி வைத்து, 5 நபர்களுக்கு புதிய வழிதட இயக்க அனுமதி ஆணைகளை வழங்கினார்.(PDF 25KB)
மேலும் பலசெ.வெ.எண்:309- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 132 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 23KB)
மேலும் பலசெ.வெ.எண்:308- அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது. (PDF 590KB)
மேலும் பலசெ.வெ.எண்:307- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கீழ்குந்தா பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சி, இத்தலார் மற்றும் நஞ்சநாடு ஊராட்சி பகுதிகளில் ரூ.82.53 இலட்சம் மதிப்பில் நடைபெற்று முடிந்த மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:306- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 18.06.2025 அன்று குன்னூர் வட்டத்தில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025ஜூன் மாதம் எதிர்வரும் 18.06.2025 அன்று முற்பகல் 09.00 மணியளவில், ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்” என்ற திட்டமானது குன்னூர் வட்டத்தில் நடைபெற உள்ளது.(PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:305- குந்தா வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -13.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், பாலக்கொலா ஊராட்சிக்குட்பட்ட தங்காடு பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் 62 பயனாளிகளுக்கு ரூ.38.78 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 62KB)
மேலும் பல