மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:728- நீலகிரி மாவட்டத்தில் உலக மாற்றத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2025

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற ஓவியப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 30KB)

மேலும் பல

செ.வெ.எண்:727- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் குன்னூரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு முகாமினை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 108KB)

மேலும் பல

செ.வெ.எண்:726- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் உதகமண்டலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றத்தை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் உதகை நகராட்சி அலுவலகத்தில், பூர்த்தி செய்து திரும்பி பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம்; செய்யப்படுவதை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 202KB)  

மேலும் பல

செ.வெ.எண்:725- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 204KB)

மேலும் பல

செ.வெ.எண்:724- பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கான “அவ்வையார் விருது- 2026”

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த ஒருவருக்கு “அவ்வையார் விருது – 2026” மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1.50/- இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே தகுதியான நபர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 31.12.2025 – க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 51KB)

மேலும் பல

செ.வெ.எண்:723- அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

நீலகிரி மாவட்டம் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Laboratory Technician (ICTC), Pharmacist, Tribal Counsellor.(PDF 62KB)

மேலும் பல

செ.வெ.எண்:722- கூடலூர் வட்டாரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 22.11.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

“நலம் காக்கும் ஸ்டாலின்” 11-வது முகாமானது 22.11.2025 சனிக்கிழமை அன்று கூடலூர் வட்டாரத்திற்குட்பட்ட பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெறவுள்ளது.(PDF 231KB)

மேலும் பல

செ.வெ.எண்:721- அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

நீலகிரி மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு(PDF 44KB)

மேலும் பல

செ.வெ.எண்:720- நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே குறும்படத்தின் மூலம் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; தொடர்பாக, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்பட்ட குறும்படத்தினை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நேரில் பார்வையிட்டனர்.(PDF 224KB)

மேலும் பல

செ.வெ.எண்:719- அரசு தலைமைக்கொறடா அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பையின் சுற்றுப்பயணத்தினை வரவேற்றார்

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ள 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை விளையாட்டு போட்டியினை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த உலகக் கோப்பையின் சுற்றுப்பயணத்தினை அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்று, கோப்பையினை திறந்து வைத்து, போட்டியின் சின்னமான காங்கேயனை பார்வையிட்டார்.(PDF 51KB)

மேலும் பல