மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:

மாண்புமிகு அரசு தலைமை கொறடா கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டங்களை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 08/11/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக பள்ளிக் கல்வித்துறை சார்பில், நீலகிரி மாவட்டத்தில் ரூ.6.56 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வகத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குத்துவிளக்கேற்றி வைத்து, வகுப்பறை கட்டங்களை பார்வையிட்டார்.(PDF 27KB)

மேலும் பல

செ.வெ.எண்:686- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்படும் விடுதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2024

நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்படும் உதகை அரசு தொழிற்பயிற்சி மாணவர் விடுதி, ஐடிஐ ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய விடுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 32KB)

மேலும் பல

செ.வெ.எண்:685- நீலகிரி மாவட்டத்தில் வனஉரிமைச் சட்டம் 2006 அமல்படுத்துதல் தொடர்பான பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2024

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனஉரிமைச் சட்டம் 2006 அமல்படுத்துதல் தொடர்பான பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 34KB)

மேலும் பல

செ.வெ.எண்:684- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2024

நீலகிரி மாவட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் பொதுக்குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 26KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:683- டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் பிரச்சாரத்திற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி DoPPW உடன் கைகோர்க்கிறது

வெளியிடப்பட்ட நாள்: 06/11/2024

இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலன்(DoPPW) சார்ந்த துறையுடன் இணைந்துநவம்பர் 1 முதல் நவம்பர் 30, 2024 வரை நாடு தழுவிய டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பிரச்சாரத்தில் (DLC 3.0) நாட்டில் உள்ள 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.(PDF 288KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:682- நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 06/11/2024

நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற பழங்குடியினர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பார்வையிட்டார்.(PDF 32KB) 

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:681- பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – நவம்பர்-2024

வெளியிடப்பட்ட நாள்: 06/11/2024

நீலகிரி மாவட்ட அளவில் தொழிற்பழகுநர்களுக்கான ‘பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்” குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 11-11-2024 அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெறவுள்ளது. (PDF 201KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:680- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் வட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 05/11/2024

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 32KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:679- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 04.11.2024

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2024

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து 113 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 21KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:678- குரங்கு அம்மை (Monkeypox) நோயிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2024

கேரளா மாநிலத்தில் குரங்கு அம்மை (Monkeypox) நோய் வெகுவாக பரவி வருவதால், நீலகிரி மாவட்டத்தில் நோயின் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 57KB)

மேலும் பல