மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:

செ.வெ.எண்:647- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை திருக்கோவிலில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு இணைகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2024

நீலகிரி மாவட்டம் உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, 5 இணைகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். (PDF 22KB)

மேலும் பல

செ.வெ.எண்:646- மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதியில் தடுப்பனை அமைக்க சாத்திய கூறுகள் உள்ளனவா குறித்து ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 19/10/2024

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், கூக்கல் ஊராட்சி, கூக்கல்தொரை கிராமத்தில் உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதியில் தடுப்பனை அமைக்க சாத்திய கூறுகள் உள்ளனவா குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 107KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:645- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2024

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., தலைமையில் இன்று (18.10.2024) நடைபெற்றது. (PDF 107KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:644- நீலகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தனித்தனி அறைகள் ஏற்படுத்தி இருப்பு வைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2024

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, சட்டமன்ற தொகுதி வாரியாக (108-உதகமண்டலம், 109-கூடலூர் (தனி) மற்றும் 110-குன்னூர்) தனித்தனி அறைகள் ஏற்படுத்தி இருப்பு வைக்கும் பொருட்டு, பொதுப்பணித்துறையின் அலுவலர்கள் மூலம் அளவீடு பணிகள் மேற்கொள்ள மற்றும் மாதாந்திர ஆய்விற்காக, நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (18.10.2024) […]

மேலும் பல

செ.வெ.எண்:643- மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் “3வது நீலகிரி புத்தகத் திருவிழா” வினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2024

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற 3வது “நீலகிரி புத்தகத் திருவிழா”வில் வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைய புத்தகம் வாசிக்கும் பழகத்தினை நாள்தோறும் கடைபிடிக்க வேண்டும் மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பேச்சு.(PDF 122KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:642- தற்காலிகப் பட்டாசுக்கடை உரிமம்

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2024

தீபாவளி பண்டிகை எதிர்வரும் 31.10.2024 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசுக்கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற்றிட (http://www.tnesevai.tn.gov.in) இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் E Sevai மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.(PDF 23KB)

மேலும் பல

செ.வெ.எண்:641- நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2024

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொண்டதற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் பாராட்டு தெரிவித்தார். (PDF 108KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:640- புதிய காஜி நியமனம் செய்வதற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2024

புதிய காஜி நியமனம் செய்வதற்கு மாவட்ட அளவிலான தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு. நீலகிரி மாவட்டத்தில் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக மாவட்ட காஜி அவர்களின் பதவி காலம் 13.09.2023 அன்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது புதிய காஜி நியமனம் செய்வதற்கு மாவட்ட அளவிலான தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 19KB)

மேலும் பல

செ.வெ.எண்:639- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் கூடலூர் வட்டம் 17-10-2024

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2024

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், மியாஞ்சிபேட்டை நகராட்சி ஆரம்பப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:638- நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படைபிரிவில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2024

நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படைபிரிவில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி (Deputy Area Commander) பதவிக்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பம் 25.09.2024-ம் தேதிக்குள் கோரப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது (PDF 318KB)

மேலும் பல