செ.வெ.எண்:637- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை வட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2024நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:636- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாகப்பனை பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலை மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை ஊராட்சிக்குட்பட்ட வாகப்பனை பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலை மேம்படுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 21KB)
மேலும் பலசெ.வெ.எண்:635- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024நீலகிரி மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் தமிழ்நாடு கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். (PDF 29KB)
மேலும் பலசெ.வெ.எண்:634- இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகை
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024இயற்கை முறையில் தோட்டக்கைலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்க தொகையாக முதலாம் பரிசு ரூ.1,00,000/ம் இரண்டாம் பரிசு ரூ.60,000/ம் மூன்றாம் பரிசு ரூ.40,000/ம் வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.(PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:633- வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் பற்றிய செய்தி வெளியீடு.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:632- (2024-2025)ஆம் கல்வியாண்டின் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான வட்டார அளவிலான மருத்துவ முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024நீலகிரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய 2024-2025ஆம் கல்வியாண்டின் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான வட்டார அளவிலான மருத்துவ முகாமானது இன்று (15.10.2024) உதகமண்டலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. (PDF 32KB)
மேலும் பலசெ.வெ.எண்:631- நீலகிரி மாவட்டத்தில் 3-வது புத்தகத் திருவிழா-2024 அக்டோபர் மாதம் 18.10.2024 முதல் 27.10.2024 நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3-வது புத்தகத் திருவிழா – 2024 அக்டோபர் மாதம் 18.10.2024 முதல் 27.10.2024 வரை உதகமண்டலம், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பானையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் அரசுத்துறைகள் சார்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.(PDF 27KB)
மேலும் பலசெ.வெ.எண்:630- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2024நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 107KB)
மேலும் பலசெ.வெ.எண்:629- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2024நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து 130 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:628- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2024நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி, புளியம்பாறா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கம் சைல்டு பண்ட் இன்டர்நேஷனல் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.(PDF 21KB)
மேலும் பல