ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:464 – அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 22.09.2026 வரை நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 22.09.2026 வரை நடைபெறுகிறது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு 40 பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. (PDF 38KB)

1 copy

செ.வெ.எண்:463 – மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் தலைமையில் இன்று (18.09.2026) நடைபெற்றது. (PDF 62KB)

1 copy

செ.வெ.எண்:462 – மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் 40 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடி மதிப்பீட்டிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 10.99 கோடி மதிப்பில் முடிவுற்ற 55 புதிய திட்டபணிகளை மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் திறந்து வைத்து, 40 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 57KB)

DSC_0286 copy

செ.வெ.எண்:461- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடினமாலா, அரக்கோடு, தேனாடு, நெடுகுளா மற்றும் கோடநாடு ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 62KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:460- இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI – Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.(PDF 70KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:459- தற்காலிகப் பட்டாசுக்கடை உரிமம்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

தீபாவளி பண்டிகை எதிர்வரும் 08.11.2026 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசுக்கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற்றிட (http://www.tnesevai.tn.gov.in) இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள்E Sevai மூலம் உரிய ஆவணங்களுடன்10.10.2026-ற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (PDF 153KB)

1 (12)

செ.வெ.எண்:458- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் குன்னூர் வட்டம் 16.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.09.2026) குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில்,17 பயனாளிகளுக்குரூ.17.77 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 90KB)  

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:457- சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

2026-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது (PDF 404KB)

14 copy

செ.வெ.எண்:455- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசுச் செயலாளர் அவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2026

நீலகிரி மாவட்டம் உதகை எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், நடைபெற்று வரும் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை,மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசுச் செயலாளர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் இன்று (13.09.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆண்களுக்கான கால்பந்து போட்டியினை துவக்கி வைத்தார். (PDF 326KB)

1 copy

செ.வெ.எண்:451- மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் புலி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் ஓவேலி 4வது டிவிசன் லாரன்ஸ்டன் பகுதியில் புலி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (11.09.2026) நேரில் சென்று ஆறுதல் கூறினார். (PDF 39KB)