ஊடக வெளியீடுகள்
செ.வெ.எண்:474- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026நீலகிரி மாவட்டம், கூடலூர் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.. அவர்கள் இன்று (24.09.2026) துவக்கி வைத்து, 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாலை, பழவகைகள், வெற்றிலை பாக்கு, மஞ்சள்கயிறு, குங்குமம், சந்தனம், வளையல், புடவை, இனிப்பு உள்ளிட்ட 9 வகையான சீர்வரிசை பொருட்கள் மற்றும் உணவினை வழங்கினார். (PDF 45KB)
செ.வெ.எண்:473- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்குந்தா, பாலக்கொலா,மேலூர் ஊராட்சிகள் மற்றும் பிக்கட்டி, கீழ்குந்தா பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 62KB)
செ.வெ.எண்:472- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று (22.09.2026) நடைபெற்றது. (PDF 44KB)
செ.வெ.எண்:471 – இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் முற்றிலும் தொகுப்பூதிய அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர் மாத தொகுப்பூதியம் ரூ.20,000/- (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) மற்றும் அலுவலக உதவியாளர் மாத தொகுப்பூதியம் ரூ.13,000/- (ரூபாய் பதிமூன்றாயிரம் மட்டும்) ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 424KB)
செ.வெ.எண்:470 – கிராமசபைக் கூட்டம் 96 கிராம ஊராட்சிகளிலும் 02.10.2026 அன்று நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026காந்தி ஜெயந்தி தினமான (02.10.2026) அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 96 கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. (PDF 28KB)
செ.வெ.எண்:469- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 25.09.2026 அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 25.09.2026 (வெள்ளிக் கிழமை) அன்று கோத்தகிரி கேபீயஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோர்ஸ்லி ஹில், குன்னூர் சாலை, கோத்தகிரி, நீலகிரி மாவட்டம் – 643217 வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. (PDF 38KB)
செ.வெ.எண்:468 – பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்று (22.09.2026) சென்னை திருவான்மையு௧௦ர் காந்தி கிராமம் சென்னை நடுநிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுடன் உணவு அருந்தினார். (PDF 45KB)
செ.வெ.எண்:467 – வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026Tamil Nadu Stamp (Constitution of Valuation Committee for Estimation, Publication and Revision of Market Value Guidelines of Properties) Rules, 2010 விதி 4(2)-ன்படி பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் கடித எண்.29590/எல்2/2026 நாள்.18.07.2026 வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களைந்திடும் பொருட்டு வரைவு வழிகாட்டி தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சார்பதிவாளர் […]
செ.வெ.எண்:466- நியாய விலைக் கடைகளில் eKYC பதிவு மேற்கொள்ள 19.09.2026 அன்று சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை தங்களது நியாய விலை கடையில் உள்ள POS இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும். (PDF 54KB)
செ.வெ.எண்:465 – பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் -செப்டம்பர் -2026
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நீலகிரி மாவட்ட அளவில் தொழிற்பழகுநர்களுக்கான ‘பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்” குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 23.09.2026 – அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெறவுள்ளது. (PDF 50KB)