மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
P.R.NO. 213 - 0224

செ.வெ.எண்:213 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள முதியோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள முதியோர்களிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் கேரம்போர்டு மற்றும் தாயம் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 97KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:212 – தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் தொடர்பு எண்கள்

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகள் சமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளர் திரு.மஞ்சித் சிங் பரார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர் (காவல்) திரு.மனோஜ் குமார் இ.கா.ப., அவர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 33KB)  

மேலும் பல
P.R.NO. 211 - 0124

செ.வெ.எண்:211 – தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் ஆகியோர் தலைமையில், தேர்தல் தொடர்பான அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் – 2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாகவும், தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்தும், தேர்தல் பொது பார்வையாளர் திரு.மஞ்சித்சிங் பிரார் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் திரு.டி.கிரண் இ.வ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில், தேர்தல் தொடர்பான அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. (PDF 27KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:210 – தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் சி விஜில் (C-Vigil) என்ற செயலியின் மூலம் தெரிவிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2024

நீலகிரி மாவட்டத்தில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் சி விஜில் (C-Vigil) என்ற செயலியின் மூலம் தெரிவிக்கலாம். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 33KB)  

மேலும் பல
P.R.NO. 209 - 0124

செ.வெ.எண்:209 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய கும்மிபாட்டு கலைநிகழ்ச்சியினை பார்வையிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய கும்மிபாட்டு கலைநிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 21KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:208 – நீலகிரி மாவட்டத்தில் 26.03.2024 அன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொண்டோர் விவரம்

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024

நீலகிரி மாவட்டத்தில் 26.03.2024 அன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொண்டோர் விவரம் .  (PDF 25KB)

மேலும் பல
P.R.NO. 207 - 0124

செ.வெ.எண்:207 – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை பார்வையிட்டு, விழிப்புணர்வு பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, விழிப்புணர்வு பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 113KB)

மேலும் பல
P.R.NO. 206 - 0324

செ.வெ.எண்:206 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. (PDF 119KB)

மேலும் பல
P.R.NO. 205 - 0124

செ.வெ.எண்:205 – பஞ்சாப் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடம் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2024

நீலகிரி மாவட்டத்தில், பஞ்சாப் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடம் உரிய ஆவணங்களின்றி, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.69,400/- ரொக்கத்தினை, இன்று (25.03.2024) அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. (PDF 32KB)

மேலும் பல
P.R.NO. 204 - 0124

செ.வெ.எண்:204 – நீலகிரி மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கிடையேயான எல்லையோர நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2024

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, நீலகிரி மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டங்களுக்கிடையேயான எல்லையோர நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மலப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வி.ஆர்.வினோத், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. (PDF 33KB)  

மேலும் பல