மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:742- நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை மறுசீரமைப்பு செய்திட கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து 88 கிராம ஊராட்சிகளாகவும் மீதமுள்ள 8 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்திட, பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலசங்கங்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் அதனை 17.12.2025 க்குள் மாவட்ட ஆட்சித்தலைவர், நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 96KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:741- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தானியங்கி வாட்டர் ஏடிஎம் இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பிஸ்லேரி இண்டர்நேஷனல் சார்பில் அமைக்கப்பட்ட தானியங்கி வாட்டர் ஏடிஎம் இயந்திரத்தினை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 44KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:740- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர்களின் வீடுகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நீலகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில், (PVTG) குறிப்பாக பாதிக்கப்பட கூடிய பழங்குடியினர் குழுக்களை சார்ந்த 5 பழங்குடியினர்களின் வீடுகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 51KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:739- நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களை தீர்க்க உதவிமையங்கள் செயல்படும்

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவம் நிரப்புதல் மற்றும் ஏனைய அனைத்து சந்தேகங்களுக்கும் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. உதவிமையங்கள் 02.12.2025 முதல் 11.12.2025 வரை காலை 10.00 முதல் மாலை 06.00 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இச்சேவையினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்(PDF 245KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:738- நீலகிரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி – 2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி 2025 இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:737- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர்-2025 மாதத்தில் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.(PDF 28KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:736- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 129 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 56KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:735- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் டிசம்பர் 2025 மாதத்திற்கு  02.12.2025 மற்றும் 03.12.2025 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 31KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:734- உதகை வட்டாரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 29.11.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 27/11/2025

“நலம் காக்கும் ஸ்டாலின்” 12-வது முகாமானது 29.11.2025 சனிக்கிழமை அன்று உதகை வட்டாரத்திற்குட்பட்ட ராக்லேண்ட், சாம்ராஜ்எஸ்டேட், சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெறவுள்ளது.(PDF 234KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:733- தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES)

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படத்தப்படும், இத்திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.2.00 லட்சம்) 10 இலட்சம் வரை வங்கிக்கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.(PDF 75KB)

மேலும் பல